பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாட்டின் திறம் 63

கற்பனைக் களஞ்சியமாகிய துறைமங்கலம் சிவப்பிர காச சுவாமிகளும் படியிலாகின் பாட்டில் ஆருர கனி விருப்பன் பரமன்' என்று ஆரூரது அருட்பாட்டை அறிவித்துள்ளார். இன்னேரன்ன காரணங்களால் திருப்பாட்டு என்பது சுந்தராது பாட்டுத்தான் என்பது புலனுகிறது.

சுங்தரருடைய திருப்பாட்டு எல்லோராலும் நனி விரும்பும் தன்மையுடையது. அஃது அங்ங்ணம் அமைந்த பாடல் என்பதை, முன் அமைந்துள்ள திரு என்னும் சொல்லே அறிவித்து கிற்கிறது. திரு என்னும் சொல் லிற்குப் பேராசிரியர் திருக்கோவையார் உரையில் கண் டோரால் விரும்பப்படும் தன்மை என்று கூறியிருக் கின்றனர் அல்லரோ ?

இறைவனுர்க்கும் இவர் பாட்டில் பெருவிருப்பம் உண்டு என்பதைக் காரணங்காட்டி விளக்கினர் சிவப் பிரகாச சுவாமிகள். அப்பாட்டு,

படியிலா கின்பாட்டில் ஆரூர !

கனிவிருப்பன் பரமன் என்ப தடியனே அறிந்தனன்வான் தொழும்ஈசன்

கினைத்தடுத்தாட் கொண்டு மன்றித் தொடியுலாம் மென் கைமட மாதர்பால்

நினக்காகத் தூது சென்றும் மிடியிலா மனேகடொறும் இரந்திட்டும் உழன்றமையால் விளங்கு மாறே

என்பது. சுந்தரர் திருப்பாட்டில் விருப்பங்கொண்ட இறைவர் அவர்பொருட்டுப் பரவையார் ஊடல் தீர்க்கத் துரது சென்ருர் என்றும், பசிதீரப் பிச்சை எடுத்து