பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கட்டுரைக் கொத்து

வந்து அன்னம் இட்டார் என்றும் அன்ருே இவ்வெடுத் துக்காட்டுக் காட்டுகிறது. இதனை மேலு விளக்கும் வார் போல இராமலிங்க அடிகளாரும்,

இன்பாட்டுத் தொழிற்பொதுவில்

இயற்றுகின்ற எம்பெருமான் உன்பாட்டுக் குவப்புறல்போல்

ஊர்ப்பாட்டுக் குவந்திலர்என் றென்பாட்டுக் கிசைப்பினுமென் ?

இடும்பாட்டுக் கரணமெலாம் அன்பாட்டுக் கிசைவதுகாண்

அருட்பாட்டுப் பெருந்தகையே’

என்று மனம் உவந்து பாடியுள்ளார்.

சுந்தரர் பாட்டை எப்பொழுதும் கேட் டு க் கொண்டு இருப்பதற்காகவே இறைவரும் இவரை ஆட் கொள்ளும்போதும்,

மற்று வன்மை பேசி வன்தொண்டன் என்னும் காமம் பெற்றன ; நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அற்சனை பாட்டே ஆகும்; ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடு கென்ருர் தூமறை பாடும் வாயார்’ என்று கட்டளையிட்டருளினர் போலும் !

இறைவனே விரும்பும் திருப்பாட்டை வன் தொண்டர் பாடும் திறன் பெற்றவராயின், இவரது கல்வி அறிவை நாம் அளங்து கூறமுடியாதன்ருே ?

இவர் கல்வியறிவின் ஆழத்தை நாம் இவர் பாடி யுள்ள பாட்டினின்றும் நன்கு அறியலாம். இவர் பூகோளக்கலே அறிவை நன்கு பெற்றவர் என்பதற்குச்