பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

கட்டுரைக் கொத்து

என்று எடுத்துக்காட்டையும் இயம்பிச் செல்கிறது. இதில் வீரனது மறம் பேசப்படுதல் காண்க. தானே மறத்தைப்பற்றிப் பேசுகையில்.

தாம்படைத் தலைக்கொள்ளவும்
ஒம்படுத்த உயர்புகூறின்று

என்று காட்டி இவ்விலக்கணத்திற்கு இலக்கியமாகக்

கழுதார் பறக்தலேக் கண்ணுற்றுத் தம்முன்
இழுதார்வேல் தானே இகலில்-பழுதாம்
செயிர்காவல் பூண்டொழுகும் செங்கோலார் செல்வம்
உயிர்காவல் என்னும் உரை.

என்று கூறி, இதில் தானே மறத்து வீரம் ஒதப்பட்ட தைக் காண்க.

இத்துடன் இன்றி இத்தானே மறத்தின் ஆண்மை யினை,

'வேற்ருனே மறம்கூறி மாற்ரு தழிபிரங்கினும்
ஆற்றின் உணரின் அத்துறை ஆகும்'

என்று இலக்கணவகையால் உணர்த்தி, இலக்கிய முறையில்,

மின்ஆர் சினம்சொரிவேல் மீளிக் கடல்தானே
ஒன்னுர் நடுங்க உலாய்கிமிரின்-என்ஆம்கொல்
ஆழித்தேர் வெல்புரவி அண்ணல் மதயானைப்
பாழித்தோள் மன்னர் படை”

என்றும் அறிவிக்கிறது புறப்பொருள் வெண்பாமாலை,

தேர் மறமாவது,
"முறிமலர்த்தார் வயவேந்தன்
செறிமணித்தேர்ச் சிறப்புரைத்தன்று'