பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கட்டுரைக் கொத்து

"இணைகொள் ஏழெழு நூறிரும் பனுவல் ஈன்றவன் திருநாவினுக்கரையன்' என்று திருகின்றியூர்ப் பதிகத் தில் குறித்துள்ளதிலிருந்து அறியலாம்.

சைவசமயப் பெருநூல்களே அன்றித் தொல் காப்பியம், சங்க இலக்கியம் போன்ற இலக்கண இலக் கிய நூல்களிலும் இவருக்குப் பெரும் பயிற்சி உண்டு என்பது இவருடைய திருப்பாட்டில் காணக் கிடைக் கும் குறிப்புக்களால் கன்கு புலகிைறது. திருவாரூர்ப் பரவையுண்மண்டளிப் பதிகத்தில் எழுத்தோடு சொல் பொருள் எல்லாம் முன் கண்டானே' என்னும் தொடர் தொல்காப்பியப் பகுப்பாகிய எழுத்ததிகாரம், சொல் லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய முக்கூற்றில் இவர்க்கு நல்ல பயிற்சி இருந்திருக்கவேண்டும் என்று ஊகிக்க இடம் இருக்கிறது அன்ருே திருப்புகலூர்ப் பதிகத் தில், கொடுக்கிலாதானப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரிலே என்னும் கருத்து, "பாரி பாரி என்று பல ஏத்தி ஒருவன் புகழ்வர் செங்காப் புலவர்' என்னும் புறநானூற்றுப் பாடலில் இவர் ஈடுபட் டிருந்த நிலைமையை உணர்த்தும். திருநெல்வாயில் திரு அறத்துறைப் பதிகத்தில் திருக்குறள் சொல்லேயும் பொருளையும் வாரிப் பெய்துள்ளார். அகர முதலின் எழுத்தாகி பொறிவாயில் இவ் ஐந்தினையும் அவிய' பிறவிக்கடல் நீந்தி 'உறங்கி விழித்தால் ஒக்கும் இப் பிறவி என்பன அப்பதிகத்தில் காணும் திருக்குறட் கருத்துக்கள். அக்கருத்துக்கள் 'அகர முதல எழுத் தெல்லாம் பொறிவாயில் ஐந்தவித்தான் பிறவிப் பெருங்கடல் நீந்துவர் 'உறங்கி விழிப்பது போலும் பிறப்பு' என்னும் திருக்குறள் தொடர்களே ஒட்டியவை