பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாட்டின் திறன் 73

தான் பழியே அன்றி, எனக்கு ஒன்றும் இல்லே. இனி யாகிலும் நீர் சுகமாக மனேவி மக்களோடு வாழ்க என்று வாழ்த்துவதுபோல எசுகின்ருர் அல்லரோ ?

சுங்தரர் திருப்பாட்டில் உபதேசத்திறன் பலபட விரிந்து காணப்படுகிறது. மக்கட்கு எங்தெந்த முறை. யில் அறிவுறுத்த வேண்டுமோ அவ்வம்முறையில் அறி வுறுத்திச் சென்றுள்ளார். அரசர்களுக்கும் அறவுரை மொழிந்துள்ளார். பொதுமக்கட்கும் பொன்னுரைபுகன் அறுள்ளார். அவ்வறவுரையையும் பொன்னுரையையும் மக்கள் யாவரும் உணர்ந்து தம் எண்ணத்தை இறையடி யில் செலுத்துதற்கு ஏதுவாகும்.

'மத்த யானே ஏறி மன்னர் சூழவரு வீர்காள் !

செத்த போதில் ஆரும் இல்லை

சிந்தையுள்வைம் மின்கள் l' என்பது அரசருக்குப் புகன்ற அறிவுரை.

தோற்றம் உண்டேல் மரணம் உண்டு

துயரமனே வாழ்க்கை' 'இன்பம் உண்டேல் துன்பம் உண்டு

ஏழைமனே வாழ்க்கை'

‘வாழ்வாவது மாயம் இது மண்ணுவது திண்ணம்' 'ஒடுபுனல் கரையாம் இளமை’

என்பன மக்களுக்கு நல்லறிவுகொளுத்த எழுந்த பொன் லுரைகள்.

இறைவனே நோக்கி இரக்கத்தோடு பாடிய திறனே யும் பார்மினே! பார்மின் !