பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமறுப்புலவர் உணர்த்திய பாலே 87

உலகம் நான்கு பிரிவுக்குள் அடங்கும் என்பது நமது தமிழ் இலக்கண மரபு. அவை காடும் காட்டைச் சார்ந்த இடமாகிய முல்லையும், மலையும் மலேயைச் சார்ந்த இடமாகிய குறிஞ்சியும், வயலும் வயலேச் சார்ந்த இடமாகிய மருதமும், கடலும் கடலேச் சார்ந்த இடமாகிய நெய்தலும் ஆகும். இந்த உண்மையினே நமது ஒல்காப் பெருமை வாய்ந்த தொல்காப்பியம்,

மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே

என்று கூறி உறுதிப்படுத்துகிறது. இந்நூற்பாவின் மூலம் பாலே என்னும் ஒரு கிலம் குறிப்பிடாமையினே நாம் அறிகிருேம்.

ஆல்ை, பின் வங்த தமிழ் இலக்கணங்களும் இலக் கியங்களும் பாலே என்னும் நிலம் உண்டு என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டே பேசுகிறது. தொல்காப்பியமோ பாலே கிலத்தை நடுவனது என்னும் சொல் லா ல் குறிப்பிடுகின்றது. தொல்காப்பியர் பாஃலயை நடுவணது என்று ஏன் குறியீடு தங்து மொழிந்தனர் என்பதற்கு விளக்கம் கூறவந்த உச்சி மேல் புலவர்கொள் நச்சினர்க்கினியர்,

'அப் பாலே ஏனைய போல ஒருபால் படாது நால் வகை கிலத்திற்கும் உரியவாகப் புலனெறி வழக்கம் செய்து வருதல் பற்றிப் பாலேக்கு நடுவணதென்னும்