பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமறுப்புலவர் உணர்த்திய பாலே

இதனைத் தட்சயாக பரணியும் பாலையில் பேப்கள் நடமாடுவதை,

பிணங்கடும்கனலும் இன்றி வெந்துகில வாய்நிமிர்ந்துபில வாயபேய்

நிணம்கரைக்துருக நெய்யை ர்ே.என

நினைத்து நாவினை கனைக்குமே

என்று காட்டுகிறது.

பாலைவனத்தில் ஆட்களின் நடமாட்டம் இல்லை என்பதைப் புலவர் ஆள் வழக்கற்ற வெம் காணம்' என்பர். கலித்தொகை 'புள்ளும் வழங்காப் புலம்பு கொள் ஆர் இடை' என்கிறது. அதாவது பறவைகள் கூடப் பாலையில் பறக்காவாம். மேலும், அக்கலித் தொகை மக்கள் நஉமாட்டம் பாலையில் இல்லாமைக்கும் காரணம் கூறுகிறது. அதாவது பாலையில் வாழும் மக்கள் யாரேனும் தப்பித் தவறி அவ்வழியே வங்தால் அவர்களிடம் உள்ள பொருளைப் பறிக்க அவர்களே வதைப்பார்களாம். பொருள் இல்லை என்பதை வங்து அகப்பட்டவர்கள் கூறினலும், அவர்களே வதைத்து அவர்கள் வதை பொறுக்க முடியாமல் துள்ளுவதைக் கண்டு இன்புறுவார்களாம். இதனை அக்கலித்தொகை,

அற்றம்பார்த்து அல்கும் கடுங்கண் மறவர்தாம் கொள்ளும் பொருளிலர் ஆயினும் வம் லர் துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வவ்வலின்

என்கிறது. இக்கருத்துக்கள் அனே க் ைத யும் உட் கொண்டே உமறுப்புலவர் ஆள் வழக்கற்ற வெங்கானம் என்றனர்.