பக்கம்:கட்டுரை வளம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 கட்டுரை வள ப்

என்று அகலிகை சாபம் பற்றிய சித்திரம், திருப்பரங் குன்றத்துச் சித்திர மண்டபத்தில் அழகுற வரையப்பட் டிருந்தது என்பது கூறப்பட்டுள்ளது. மதுரைக் காஞ்சியில் இராவணனைப் பற்றிய செய்தியொன்று வந்துள்ளது,

“தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற்

தொன்முது கடவுள் பின்னர் மேய’

-மதுரைக் காஞ்சி : 40-41

என்னும் அடிகளில் தென்னவன் என்றது இராவணனை: கடவுள் என்றது அகத்திய முனிவரை. இம்முனிவர் பொதியின்கணிலிருந்து ‘இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து அவன் உள்ளிட்ட இராக்கதர்களை ஆண்டு இயங்காமை விலக்கினார்’ என்பது பழைய வரலாறு.

சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் கோவலனைத் தேற்றுமுகத்தான் ‘இராமன் விதி வயத்தால் தந்தை கட்டளைப்படி மனைவியுடன் காடு சென்று கடுந்துயர் உழந்தான்,’ என்று குறிப்பிட்டுள்ளார் :

“தாதை ஏவலின் மாதுடன் போகிக்

காதலி நீங்கக் கடுங்துயர் உழந்தோன் வேத முதல்வற் பயந்தோன் என்பது யேறிங் திலையோ? நெடுமொழி அன்றோ?

-சிலம்பு, ஊர் காண்காதை : 46-49

இப்பகுதியில், ‘நெடுமொழி என்ற சொல் சற்று ஊன்றி உணரத்தக்கது. ஆண்டாண்டு காலமாக அடிபட்டுப் பயின்று வழங்கும் கதை இராமனின் திருக்கதை என்பது இதனால் நன்கு தெரியவருகின்றது, மேலும், இளங்கோ வடிகள், புறஞ்சேரியிறுத்த காதை"யில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/102&oldid=1377396" இலிருந்து மீள்விக்கப்பட்டது