பக்கம்:கட்டுரை வளம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102 கட்டுரை வளம்

சிலப்பதிகாரமும் பெருங்கதையும் சம ண ர் க ள் இயற்றிய நூல்களாய் இருப்பினும், இராம காதையினைக் குறிப்பிட்டுள்ளன. புத்த ஜாதகக் கதைகளுள் இராம சரிதம் ஒன்று காண்கிறது. எனவே, காலம், சமயம், இனம் முதலியன கடந்து இராமகாதை நாடெங்கும் பரவி யுள்ளமையறியலாம்.

யாப்பருங்கல விருத்தி, தொல்காப்பியப் பொருளதி கார நாச்சினார்க்கினியர் உரை, ‘புறத்திரட்டு’ என்னும் தொகை நூலில் தொகுக்கப்பட்டுள்ள செய்யுட்களுட் சில, தேவார திவ்வியப் பிரபந்தப் பாடல்கள் சில, இராம காதைக் குறிப்புகளை கொண்டிலங்குகின்றன. ஆழ்வார் கள் இராம காதையின் பல கூறுகளையும் பக்திச் சுவையில் தோய்ந்து பாடியுள்ளனர். ‘இராமாயண வெண்பா’ என்னும் வெண்பா யாப்பில் அமைந்த நூலும் இடைக் காலத்தில் வழக்கில் இருந்துள்ளது.

இதுகாறும் கூறியவற்றால், பாரத இராமாயணக் கதைகள் பண்டு தொட்டே மக்களிடையே நன்கு வழங்கி வருகின்றன என்பதும், பழந்தமிழ் இலக்கியங்களிலும் இவ்விரு இதிகாசங்களைப் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கு உவமையாகவும், செய்தியாகவும் வந்துள்ளன என்பதும் நன்கு விளக்கமுறுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/104&oldid=1377411" இலிருந்து மீள்விக்கப்பட்டது