பக்கம்:கட்டுரை வளம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108 கட்டுரை வளம்

இருபத்தொரு முறை கூடித்திரிய குலத்து வேந்தர்களை யெல்லாம் தன் மழுவாளால் எறிந்த பரசுராமன், ஊழிக் காலத்து இறுதியில் தோன்றும் உமை கேள்வனாம் சிவன் எனத் தோன்றினான். பரசுராமனை அறியாத இராமன் அவனை ‘யார்?’ என வினவினான். அதற்கு மறுமொழி யாகப் பரசுராமன், ஒடிந்த சிவதனுசினை ஒடித்த உன் தோள்வலி அறிய இங்கு வந்தேன்!’ எனச் சினத்துடன் மொழிந்தான். அதுபோது தசரதன் பரசுராமனை இரந்து ‘போரைத் தவிர்க’ எனக்கேட்டும், இணங்காத பரசு ராமன், தன் கையில் உள்ள வில், நின்று உலகை நேமி யால் அளந்த நெடிய மாலின் வில் லென்று பெருமை சாற்றி இராமனால் கூடுமானால் அவ்வில்லை வளைக்கப் பணித்தான். உடனே இராமன் வில்லை வாங்கி வளைத்து, ‘இவ்வில்லிற்கு இலக்கு யாது?’ எனக் கேட்டான். பரசு ராமன், ‘இராமனைப் புகழ்ந்து, தான் அதுகாறும் அரிதின் முயன்று தேடிப்பெற்ற வரத்தை இலக்காக்கி, அவனை வாழ்த்தி, விடைபெற்றான். இதனைக் கம்பநாடன்,

“எய்த அம்பு இடைபழுது எய்திடாமல் என்

செய்தவம் யாவையும் சிதைக்க வேயெனக் கையவண் நெகிழ்தலும் கணையும் சென்றவன் மையறு தவமெலாம் வாரிமீண்டதே.”

-கம்ப : பால, பரசுராம, 39

எனக் கூறியுள்ளான். இது இராமன் கண்ட இரண்டாவது போர்க்களமாகும்.

மாய மானாய் வந்த மாரீசனை வதைத்தது, களங்கண்டு சிறந்த நிகழ்ச்சியன்று. எனவே அதனை விடுத்து, வாலி யின் வதையினைக் காண்போம்; இலங்கை வேந்தனாம் இராவணனையும் தன் வாசலிலே கட்டி அவன் வலி யடக்கிய பேராற்றல் வாய்ந்தவன் வாலி; சிறந்த சிவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/110&oldid=1377549" இலிருந்து மீள்விக்கப்பட்டது