பக்கம்:கட்டுரை வளம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமாயணப் போர்களங்கள் 115

கொன்றுகுவித்து இந்திரசித்து, நாகபாசத்தால் இலக்குவன் முதலியோரைக் கட்டிவிட்டு, இலங்கை செல்கிறான், இராமன் ஏவல்வழிச் செயற்பட்ட கருடனால் நாகபாசம் நீங்கு கிறது. வானரர் முதலியோர் மட்டும் உயிர்பெற்று எழு கின்றனர்; ஆரவாரிக்கின்றனர். ஆராவாரத்தைக் கேட்ட் இராவணன், அன்று இரவு உறங்கவில்லை. அதேபோன்று தருமமூர்த்தியாம் இராமனை எண்ணி ஏங்கும் சீதையும் உறங்கவில்லை.

நிகும்பலை யாகம் செய்ய முயன்று இயலாமற்போன இந்திரசித்து, மீட்டும் படைகொண்டு போர்க்களம் புகுகின் றான். போவதற்குமுன் தன் தந்தை இராவணனிடம், ‘சீதையை விட்டுவிட்டால் தீமை தொலையும்; இதை நான் கொண்ட அச்சம் காரணமாக உரைக்கவில்லை; உன் பாற் கொண்ட அன்பு காரணமாக உரைத்தேன்’ என்றான். அது கேட்ட இராவணன், “மற்றையவர் வீரத் தையும் ஆற்றலையும் நம்பி நான் சீதையைக் கொணர வில்லை; என்னையே நோக்கி யான் இந் நெடும்பகை தேடிக்கொண்டேன்: இராமன் பெயர் உள்ளளவும் என் பெயரும் நிலைக்கும், இன்று உள்ளவர் நாளை மாய்வர்; புகழுக்கு இறுதியில்லை,” என்றான்.

இதுகேட்ட இந்திரசித்து, போர்களம் புகுந்தான் இலக்குவனோடு வீரப்போர் ஆற்றி, இறுதியில் அவன் பிறைமுக அம்பால் தன் தலை துணிக்கப்பட்டு மாண் டான். தன் தனயனது மரணச்செய்தி கேட்ட இராவணன், பலவாறு புலம்பி, வெட்டுண்ட அவன் கையைக் கண்டு விம்மினான்; அவன் உடலத்தை இலங்கைக்கு எடுத்துச் சென்று அதனைத் தைலத் தோணியில் இடுமாறு பணித்தான், பின்னர் ஒருவாறு தேறி, இராம இலக்குவரை முற்பட வெல்லுமாறு தன் சேனைத் தலைவர்களுக்குக் கட்டளைப் பிறப்பித்து, அவர்களுக்குத் துணையாக மூல பலச்சேனையையும் அனுப்பி வைத்தான்.மூண்டது பெரும் போர்! மேகக்கூட்டங்களை ஒத்த யானைக் கூட்டங்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/117&oldid=1379377" இலிருந்து மீள்விக்கப்பட்டது