பக்கம்:கட்டுரை வளம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

I 16 கட்டுரை வளம்

மலைகளைப்போன்ற மணி வயிரத் தேர்கள். ஆசை போன்று விரியும் குதிரையின் தொகுதி, ஆகம் எத்தனையோ அத்தனை படை அவதிகள் அங்கு அணி வகுத்து நின்றன. ஆனாலும், இராமனின் வில்லாற்றல் யாவரையும் வென்றது, அரக்கர்கள், தேர், கார், கடல், பார், உம்பர் போர் ஆக எங்கும் இராமனைக் கண்டனர், இறுதியில் பத்துக்கோடி வீரர் பட்டனர், எஞ்சியோர் தெய்வப்படைகளை வீசிப்பொர, இராமனும் அவை களைத் தெய்வப்படைகளால் மாற்றி வென்றான். இறுதியில் மூலபலச் சேனை முற்றும் அழிந்த நிலையில். இரா வணன் தேர் ஏறிப் போர்களம் புகுகின்றான்; இராமனோடு சினந்து போர் புரிகிறான். இதனைக் கம்பன்,

“வேல் ஆயிரம் மழு ஆயிரம் எழு ஆயிரம் விசிகக்

கோல் ஆயிரம் பிற ஆயிரம் ஒரு கோல்படக் குறைவக் கால் ஆயின கனல் ஆயின உரும் ஆயின கதியச் சூல் ஆயின மழை அன்னவன் தொடைபல்வகை தொடுக்க’

-கம்ப, யுத்த, இராவணன் வதைப்படலம் : 55

என வருணித்துள்ளான்.

பெரும்போர் நிகழ்த்தியதன் முடிவில், இராமன் விட்ட பிறை முக அம்பு இராவணன் தலையை அறுக்க, அது கடலில் போய் விழுந்தது, ஆனால் அது மீட்டும் முளைத் தெழுந்தது: இறுதியில் அயன் படையினை இராமன், பெருந்தவத்தால் முக்கோடி வாழ்நாளை முக்கண்ணனிட மிருந்து முயன்று பெற்ற இராவணன் மார்பில் பாய்ச்ச, அது அவன் மார்பினை துளைத்து உயிரைக் குடித்தது.

முக்கோடி வாழ் நாளும் முயன்றுடைய பெருந்தவமும்

முதல்வன் முன்னாள் எக்கோடி யாராலும் வெலப்படாய்’ எனக்கொடுத்த வரமும் ஏனைத்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/118&oldid=1379518" இலிருந்து மீள்விக்கப்பட்டது