பக்கம்:கட்டுரை வளம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

கட்டுரை வளம்

 ‘கழங்கு, அம்மானை, ஊசல் என்ற மூன்று பருவங்களைக் கொண்டதாகும். சிற்றில், இழைத்தல், சிறுசோறாக்கல், ஊசல் முதலிய விளையாட்டுகளும் பெண் பாற்குக் கூறப்படுவதுண்டு.

“பிள்ளைப் பாட்டே தெள்ளிதின் கிளப்பின்

மூன்று முதலா மூவேழ் அளவும் ஆன்ற திங்களின் அறைகுவர் நிலையே’

-பன்னிரு பாட்டியல் : 10

‘சாற்றரிய காப்புத்தால் செங்கீரை சப்பாணி மாற்றரிய முத்தமே வாரானை-போற்றரிய அம்புலியே யாய்ந்த சிறுபறையே சிற்றிலே பம்புசிறு தேரொடும் பத்து’

-வெண்பாப் பாட்டியல் : செய்யுளியல், 7

அவற்றுள்,

“பின்னைய மூன்றும் பேதையர்க் காகா:

ஆடுங் கழங்கம் மானை ஊசல்.’ பாடுங் கவியால் பகுத்து வகுப்புடன் அகவல் விருத்தத் தாற்கிளை யளவாம்.”

-இலக்கண விளக்கப் பாட்டியல் : 47

“சிற்றில் இழைத்தல் சிறுசோ றாக்கல்

பொற்பமர் குழமகன் புனைமணி ஊசல் ஆண்டீ ராறதில் எழிற்காமன் நோன்பொடு வேண்டுதல் தானுள விளம்பினார் புலவர்’

-பன்னிரு பாட்டியல் : 105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/124&oldid=1382698" இலிருந்து மீள்விக்கப்பட்டது