பக்கம்:கட்டுரை வளம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

கட்டுரை வளம்

 பருவங்களும், சிவகாமியம்மை பிள்ளைத் தமிழில் பன்னிரண்டு பருவங்களும் கூறப்பட்டுள்ளன.

பிள்ளைத்தமிழ் என்ற பெயரில் பாடாவிட்டாலும், பிள்ளைத்தமிழ் நூலுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் பெரியாழ்வார்’ ஆவர். அவர் கண்ணனைக் குழந்தையாக எண்ணி மகிழ்ந்து மகிழ்ந்து பாடிப் பரவசமடைகின்றார்; கண்ணனை எண்ணெய் தேய்த்துக் கொள்ளவும், நீராடவும் அழைக்கிறார். எனவே பிள்ளைத் தமிழுக்கு வித்திட்ட பெருமை பெரியாழ்வாரையே சாரும். கடவுளைக் குழந்தையாக வைத்துப் பாடும் மரபு வடமொழி போன்ற இலக்கியங்களிலும் உண்டு. ஆனால், தமிழறிஞர் இதை ஒரு முக்கிய வடிவமாகத் தனிச் சிறப்புடன் வளர்த்துள்ளனர். நமக்கு முதன் முதலாகப் பிள்ளைத் தமிழ் என்ற பெயராலேயே கிட்டும் பிள்ளைத் தமிழ் நூல், ஒட்டக்கூத்தர் இயற்றிய குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ். ஆகும். இந்நூல், நல்ல சந்த அமைப்புப் பெற்று விளங்குகின்றது. பின் வந்த நூலாசிரியர் இவருடைய சந்த அமைப்பைப் பின் பற்றியுள்ளனர். இந்நூல் வரலாற்று ஆராய்ச்சிக்குப் பெரிதும் துணை புரிகின்றது இராசாதிராசன், இராசராசன் இரண்டாம் இராசேந்திரன் முதலியோர் செய்த பெரும் போர்களும், குலோத்துங்கனுக்கு அவர்களோடு அமைந்த உறவு முறைகளும், இந்நூலால் நன்கு தெளிவாகின்றன.

சில பிள்ளைத்தமிழ் நூல்களை இங்கு குறிப்பிடுவது நலம். அவை, மாதவச் சிவஞானமுனிவர் எழுதிய திருக்கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ். திருவாவடுதுறை சிவஞானசுவாமிகள் இயற்றிய ‘அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய திருவானைக்கா அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ் சேக்கிழார் பிள்ளைத்தமிழ்,’ குமரகுருபரர் இயற்றிய ‘மதுரை மீனாட்சியம்மை பிள்ளை தமிழ் ‘முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்' தச்சநல்லூர் அழகிய சொக்கநாதர் இயற்றிய திருநெல்வேலிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/130&oldid=1382674" இலிருந்து மீள்விக்கப்பட்டது