பக்கம்:கட்டுரை வளம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 = கட்டுரை வளம்

பற்ற இறைவனின் திருவுள்ளத்தில் அழகொழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியம் என்றும், குழற்காடேந்தும் இளவஞ்சிக்கொடி என்றும், மலையத்துவசன் பெற்ற பெரு வாழ்வென்றும் மீனாட்சியம்மையைக் குமரகுருபரர் குறிப் பிடுகின்றார் :

“தொடுக்குங் கடவுட் பழம்பாடற்

றொடையின் பயனே! நறைபழுத்த

துறைத்தீங் தமிழி னொழுகுநறுஞ்

சுவையே! அகந்தைக் கிழங்கையகழ்ந்

தெடுக்குங் தொழும்ப ருளக்கோயிற்

கேற்றும் விளக்கே! வளர்சிமய

இமயப் பொருப்பில் விளையாடும்

இளமென் பிடியே! எறிதரங்கம்

உடுக்கும் புவனங் கடந்துநின்ற

ஒருவன் திருவுள் ளத்திலழகு

ஒழுக வெழுதிப் பார்த்திருக்கும்

உயிரோ வியமே! மதுகரம்வாய்

மடுக்குங் குழற்கா டேந்துமிள

வஞ்சிக்கொடியே! வருகவே!

மலையத் துவசன் பெற்றபெரு

வாழ்வே! வருக வருகவே!”

-மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், வருகைப் பருவம் : 9

குமரகுருபரர் இப் பாடலைப் பாடும் பொழுது, அருச்சகரின் மகள் வடிவில் அன்னை மீனாட்சியே வந்து, அரசன் கழுத்தில் இருந்த மாலையைக் குமரருருபரர் கழுத்தில் இட்டு மறைந்தனளென்பது வரலாறு. இது போன்றே முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழின் மழவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/132&oldid=1382196" இலிருந்து மீள்விக்கப்பட்டது