பக்கம்:கட்டுரை வளம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132 கட்டுரை வளம்

பகழிக்கூத்தர் இயற்றிய திருச்செந்துார்ப்பிள்ளைத் தமிழ் பிள்ளைத்தமிழாயினும், பெரிய தமிழ்’ என்று பாராட்டப்படும் பெருமை வாய்ந்தது; சொற்சுவை, பொருட்சுவை, கற்பனை, அலங்காரம் முதலிய சுவைகள் நிறைந்தது. முத்தப் பருவத்து முதற்பாடலில், ‘வலம்புரி கள் ஈன்ற முத்திற்கும், மருப்பில் விளை முத்திற்கும், நெற்பயிரின் குளிர் முத்தினுக்கும் விலையுண்டு; முருகா, நின் கனிவாய் முத்தந்தனக்கு விலையில்லை,” என்று பாடும் பாடலின் சிறப்பை உள்ளவாறு சொல்லவும் வேண்டுமோ? அவ்வினிய பாடல் வருமாறு:

‘கத்தும் தரங்கம் எடுத்தெறியக்

கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்

கரையில் தவழ்ந்து வாலுகத்தில்

கான்ற மணிக்கு விலையுண்டு,

தத்தும் கரட விகடதட

தந்திப் பிறைக்கூன் மருப்பில் விளை

தரளங் தனக்கு விலையுண்டு:

தழைத்துக் கழுத்து வளைந்தமணிக்

கொத்தும் சுமந்த.பசுஞ்சாலிக்

குளிர்முத் தினுக்கு விலையுண்டு; கொண்டல் தருகித் திலங்தனக்குக்

கூறுங் தரமுண் டுன்கணிவாய்

முத்தந் தனக்கு விலையில்லை;

முருகா! முத்தந் தருகவே! முத்தஞ் சொரியும் கடலலைவாய்

முதல்வா! முத்தந் தருகவே! -திருச்செந்துார்ப் பிள்ளைத்தமிழ், முத்தப்பருவம் : 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/134&oldid=1382151" இலிருந்து மீள்விக்கப்பட்டது