பக்கம்:கட்டுரை வளம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136 கட்டுரை வளம்,

-- | “தமிழ்க்கவிஞர் பரம்பரையில் பிறந்தோமே!’ என்ற

பெருமித உணர்வும் பாரதியாருக்குப் பொங்கி வழி கின்றது. கம்பன் பிறந்த நாட்டிலே, வள்ளுவன் வாழ்ந்த நாட்டிலே, நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் எழுந்த நாட்டிலே நாமும் பிறந்தோமே!’ என்ற தருக்கும் அவர்க் குண்டு. இம்மூன்று கவிஞரினும் சிறந்த புலவர்கள் உலகில் எங்கேனும் பிறந்ததுண்டா என்றால், இல்லை என்று உறுதியாகப் பதில் இறுக்கிறார் கவிஞர்.

‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்

வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மைவெறும் புகழ்ச்சி யில்லை’

-தேசிய கீதங்கள், தமிழ் :2

என்ற அடிகளில் தமிழ்ப்புலவர்களை உலக அரங்கில் உயர் வாக ஏற்றிப் புகழ்ந்துள்ளார்.

தாய்மொழிபால் தண்டாத காதல் கொண்டவர் நம் தமிழ்க்கவிஞர் பாரதியார். இதனை,

‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்’

-தேசிய கீதங்கள், தமிழ் :I

என்று கூறியுள்ளதிலிருந்து அறியலாம். ஒருசொற் கேளிர்” என்ற அறைகூவலை முன்விடுத்து: “சேமமுற வேண்டு மெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!’ என்ற வேண்டுகோளைத் தொடுத்து, அதன் வழித் தமிழர் தம் இன்றைய கடமையினை எடுத்து மொழிகின்றார். ‘வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப் பெருக்கும் கவிப்பெருக்கும் தமிழ்மொழியில் தோன்று மானால், அறியாமைச் சேற்றில் ஆழ்ந்து கிடக்கும் குருட ரெல்லாம் கல்வி விழி பெற்று உயர்வர். என்று திண்ண மாகக் கூறுகிறார் அவர். இறுதியில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/138&oldid=1382168" இலிருந்து மீள்விக்கப்பட்டது