பக்கம்:கட்டுரை வளம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியனார் தந்த பொருளதிகாரம்

15

 தொல்காப்பியம் முப்பெரும் பகுப்பினையுடையது; மொத்தம் 1612 நூற்பாக்களையுடையது. முதலாவது எழுத்ததிகாரம், நூன் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல்’ என ஒன்பது இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பகுதியான சொல்லதிகாரம் கிளவியாக்கம், வேற்றுமையில், வேற்றுமை மயங்கியல், விளி மரபு, பெயரியல், வினையியல், இடையியல், உயிரியல், எச்சவியல், என ஒன்பது இயல்களைக் கொண்டுள்ளது. மூன்றாவது பகுதியான பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல்’ என ஒன்பது இயல்களாகப் பிரித்துப் பேசப்படுகின்றது.

தொல்காப்பியத்திற்குப் பலர் உரையெழுதியுள்ளனர். இவற்றுள் காலத்தால் முந்திய உரை இளம்பூரணர் உரையாகும். காலத்தால் பிந்தியது நச்சினர்க்கினியர் உரையாகும். எழுத்ததிகாரத்திற்கு உரை கண்ட பெருமைக்குரியோர், இளம்பூர்ணரும் நச்சினார்க்கினியருமாவர். சொல்லதிகாரத்திற்கு உரைகண்டோர், இளம்பூாணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடர் என்னும் ஐவராவர். இவற்றுள் கல்லாடர் எழுதிய உரை முழு வடிவில் தனி நூலாக இதுகாறும் வெளிவரவில்லை. பொருள் அதிகாரத்தின் முதல் ஐந்து இயல்களுக்கும் செய்யுள் இயலுக்கும் நச்சனார்க்கினியர் உரை வகுத்துள்ளார். மெய்ப் பாட்டியல், உவமயியல், செய்யுளியல், மரபியல் ஆகிய நான்கு இயல்களுக்கு மட்டும் பேராசிரியர் உரைகண்டுள்ளார். ஆக, தொல்காப்பியம் முழுமைக்கும கிட்டுகின்ற உரை இளம்பூரணர் உரையே. இவ்வுரை எளிமையும் இனிமையும் கொண்டது. சுருக்கமும் தெளிவும் அமைந்தது. இவையே பண்டைத் தமிழ் உரையாசிரியர் தந்த உரை நூல்களாகும். இவ்வுரை நூல்கள் இல்லையேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/17&oldid=1253080" இலிருந்து மீள்விக்கப்பட்டது