பக்கம்:கட்டுரை வளம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

கட்டுரை வளம்


இன்று தொல்காப்பியத்தை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளுதல் இயலாது. எனவே, இவ்வாசிரியர்கட்குத் தமிழகம் நன்றி செலுத்தும் கடப்பாடுடையது.

உலகின் பல மொழிகளிலும் நாம் எழுத்துக்கும் சொல்லுக்குமே இலக்கணம் அமைந்திருக்கக் காணலாம். ஆனால், தமிழ்மொழியில் எழுந்த மிகப்பழம் பேரிலக்கண நூலாம் தொல்காப்பியத்தில் எழுத்திற்கும் சொல்லிற்கும் இலக்கணம் கூறப்பட்டிருப்பதோடு, இலக்கியத்தில் அமையும் பொளுக்கும் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. ஆக, பொருளதிகாரம் என்பது, எழுத்தால் அமைந்த சொற்களால் உணர்த்தப்படும் பொருள்களின் இலக்கணங்களை வகைப்படுத்தி விளக்கமாக உரைப்பது ஆகும். "வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொரு ளும் நாடி" எனத் தொல்காப்பியப் பாயிரத்தின் முற்பகுதியில் காணப்படுவதால், தொல்காப்பியனார் உலக வழக்கையுணர்ந்து, பண்டைத்தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து, தமிழ்மொழியின் அமைதியினை விளக்கும் எழுத்தினையும் சொல்லினையும் கூறி. பின்னர்த் தமிழ்மொழி வழங்குவதற்கு நிலைக்களனாயுள்ள தமிழர்தம் பீடுற்ற பெருவாழ் வினைப்பெருமையுறப் பேசுகின்றார் எனலாம்.

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கம்

கலியே பரிபாட் டாயிரு பாங்கினும்

உரிய தாகும் என்மனார் புலவர.”

-தொல் : அகத்திணையியல், 1.

என்று அகத்திணையியலில் புலனெறி வழக்கம் இன்னது என்பதும், ஐந்திணைக்கு உரிமையுடையது என்பதும், இன்ன செய்யுட்கு உரித்து என்பதும் உணர்த்தப்படு கின்றன. முதற்கண் அகத்திணையியலின் முதலாவது நூற்பா'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/18&oldid=1253082" இலிருந்து மீள்விக்கப்பட்டது