பக்கம்:கட்டுரை வளம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியனார் தந்த பொருளதிகாரம்

 17.


கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்

முற்படக் கிளங்த எழுதிணை என்ப

தொல். அகத்திணையியல் : 53

என அமைந்துள்ளது. “கைக்கிளை, முல்லை. குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை என ஏழு திணையினை - ஒழுகலாற்றினைத்- தொல்காப்பியனார் சுட்டியுள்ளார். கைக்கிளை யென்பது ஒருதலைக்காமமாகும். ஒருவன் ஒருத்தி என்னும் இருவருள் ஒருவர் மட்டும் அன்பினாற்கூடி வாழ ஒருப்பட, பிறர் ஒருவர் அவரது அன்பின் திறத்தை உணராத நிலையில் இருப்பது ஒரு பக்கத்து உறவாதலின், கைக்கிளை 'ஒருதலைக் காமம்’ அல்லது ஒருமருங்கு பற்றிய கேண்மை’ என்பது அறியப்படும். பெருந்திணை எனப்படுவது பொருந்தாக் காமமாகும். ஒருவன் ஒருத்தியாகிய இருவருள் ஒருவருக்கொருவர் அன்பின்றிக் கூடி இன்பம் நுகரும் நிலை பெருந்திணையாகும் இத்தகைய உளம் பொருந்தாத வாழ்க்கை உலகில் பல இடங்களிலும் காணப்பெறுதலால், இதற்குப் பெருந் திணையெனப் பெயரிட்டனர். 'நடுவண் ஐந்திணை’ எனப்படுவது முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்பனவாம்.

முதலில் அகம் புறம் என நந்தமிழ் இலக்கியங்கள் வாழ்வுநெறியினை இருகூறாகப் பகுத்துப் பேசுகின்றன. முதலாவது ‘அகம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர் பின்வரு மாறு பொருள் விரிப்பர்: “ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவர்க்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாத தாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின், அதனை ‘அகம்’ என்றார்.

“இதனை ஒழிந்தன, ஒத்த அன்புடையார் தாமேயன்றி எல்லார்க்குந் துய்த்துணரப்படுதலானும், இவை இவ்வாறு

க-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/19&oldid=1254721" இலிருந்து மீள்விக்கப்பட்டது