பக்கம்:கட்டுரை வளம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

தொல்காப்பியனார் தந்த பொருளதிகாரம்

இந் நூற்பாவைக் கொண்டு அந்நாட்களில் முல்லைக் குத் தெய்வம் திருமாலாகவும், குறிஞ்சிக்குத் தெய்வம் முருகனாகவும், மருதத்திற்குத் தெய்வம் இந்திரனாகவும், நெய்தலுக்குத் தெய்வம் வருணனாகவும் கொள்ளப் பெற்றனர் என்பது தெரிய வருகிறது.

புறத்திணையியலில் அகத்திணை ஏழற்கும் புறமாகிய ஏழு திணைகள் கூறப்படுகின்றன. குறிஞ்சிக்குப் புறமாக வெட்சித் திணையும், முல்லைக்குப் புறமாக ‘வஞ்சித் தினை'யும், மருதத்திற்குப் புறமாக 'உழிஞைத் திணை’ யும், நெய்தற்குப் புறமாகத் 'தும்பைத் தினை'யும், பாலைக்குப் புறமாக 'வாகைத் தினை'யும், பெருந் திணைக்குப் புறமாகக் 'காஞ்சித் தினை'யும், கைக்கிளைக் குப் புறமாகப் 'பாடாண் தினை'யும் கூறப்படும். ‘வெட்சி’ எனப்படுவது பகைவர் நாட்டுப் பசு மந்தைகளைக் கவர்தல் என்றும், அதனை மீட்டல் 'கரந்தை’ என்றும், மாற்றான் நாட்டு மண்ணைக் கைக்கொள்ளுதல் ‘வஞ்சி’ என்றும், பகைவனது மதிலை வளைத்துக் கொள்ளுதல் 'உழிஞை’ என்றும், பகைவரை வெல்லுதல் ‘வாகை’ என்றும், வீடுபேறு காரணமாகப் பல வகை நிலையாமைகளை உணர்த்துவது 'காஞ்சி’ என்றும்” புலவரால் பாடப்பெறும் ஆண்மகனின் வீரம், கொடை, பண்பு முதலிய பண்பு நலன்களைச் சிறப்பித்துக் கூறுவது ‘பாடாண் திணை’ என்றும் கூறப்பெறும். போர்க்களத்துப் பட்ட வீரர்கட்கு அந்நாள்களிலேயே 'நடுகல்' எடுக்கப் பட்டது.

களவியலில் ஆண் மகன் இயல்பினைப் 'பெருமையும் உரனும் ஆடுஉ மேன'என்றும், மகளிர் இயல்பினை,

‘அச்சமும் காணும் மடனுமுங் துறுதல்
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப'

'

-தொல். களவியல் . 8

என்றும் தொல்காப்பியனார் கிளந்துரைக்கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/23&oldid=1354270" இலிருந்து மீள்விக்கப்பட்டது