பக்கம்:கட்டுரை வளம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க கால மகளிர் 31

கொண்டு மகளிர் அந்நாளில் விளையாடிய விளையாட்டு “ஓரை’ எனப்பட்டது.

வண்டலயர்தல், சிற்றில் இழைத்தல், துணங்கை யாடுதல்,குரவையாடுதல் முதலிய விளையாட்டுகள் மகளிர் விளையாட்டுகளாகச் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப் பெறுகின்றன.

  • பாசவ லிடித்த கருங்கா முலக்கை

ஆய்கதிர் கெல்லின் வரம்பணைத் துயிற்றி ஒண்டொடி மகளிர் வண்ட லயரும்’

-குறுந்தொகை : 239 : 1-3

என்ற பாடற்பகுதியும்,

“அவலெறிந்த உலக்கை வாழைச் சேர்த்தி

வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும் முடங்தை நெல்லின் விளைவயல்’

-பதிற்றுப்பத்து : 2-1-3

என்ற பாடற்பகுதியும், நெய்தல் நிலமகளிர் விளையாட் டினைக் குறிப்பிடும்.

தாம் வளர்க்கும் பாவை பாற் பேரன்பு செலுத்தினர். பெண்கள் தாம் வளர்க்கும் பாவைக்கு ஏதேனும் தீங்கு நேரிடின், அதனைப் பொருட்படுத்தித் தாங்களும் துன்புறுவர் எனக் குறிப்பிடப் பெறுகின்றது.

“தாதிற் செய்த தண்பனிப் பாவை

காலை வருந்துங் கையா றோம்பென’

-குறுந்தொகை : 48 : 1-2

மேலும் அப்பெண்கள் பாவையைத் தம் மடிமீது கிடத்திப் பாலுட்டி மகிழ்ந்து, பிற்கால வாழ்வின் நடைமுறைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/33&oldid=1371419" இலிருந்து மீள்விக்கப்பட்டது