பக்கம்:கட்டுரை வளம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 கட்டுரை வளம்

சங்க கால மகளிர் தம் தலைவன் பால் கொண்ட காதல் தலையாய காதலாகும். தன் நெஞ்சத்தைப் பிணித்தவனி டம் தலைவி எல்லையற்ற காதல் கொண்டிருந்தனள் என் பதனை நன்றாக அறியலாம். தலைவி தலைவன் பால் கொண்ட காதல் நிலத்தினும் பெரியதாய் வானினும் உயர்ந் ததாய், ஆழ் கடலினும் ஆழமுடையத்தாய் விளங்கியது :

“நிலத்தினும் பெரிதே! வானினும் உயர்ந்தன்று!

நீரினும் ஆரளவு இன்றே!’

-குறுந்தொகை : 3: 1-2

தலைவி இப்பிறவியில் இறக்க அஞ்சுகின்றாள். அஃது இறப்புக்கு அஞ்சியன்று; இறப்பின், மறுபிறப்பிற் காதல னைக் கூட இயலுமோ என்ற கவற்சியால் அஞ்சுகின்றாள் எனப் புலவர் ஒருவர் நயமுறக் கிளத்துகின்றார்.

“சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்

பிறப்புப்பிறி தாகுவது ஆயின் மறக்குவேன் கொல்லென் காதலன் எனவே”

- நற்றிணை 397 : 7-9

இந்தப் பிறவி மட்டுமல்லாது எழுமையும் தொடரும் தன்மைத்து தலைவி தலைவன்பாற்கொண்ட காதல் என்பது பின் வரும் குறுந்தொகைப் பாடற்பகுதியால் விளங்குகின்றது :

“இம்மை மாறி மறுமை யாயினும்

நீயா கியரென் கணவனை யானா கியர்நின் நெஞ்சு நேர் பவளே’

-குறுந்தொகை, 49 : 3-5 இத்தகு ஆராக் காதல் கொண்ட தலைவி, தன் உள் ளம் கவர்ந்த கள்வனையே மணக்க விரும்புகின்றாள்.

அதற்கு ஏதேனும் இடையூறு நேர்ந்தால், அவனோடு உடன்போக்கிற்கு ஒருப்படுகின்றாள். தலைவனோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/40&oldid=1371484" இலிருந்து மீள்விக்கப்பட்டது