பக்கம்:கட்டுரை வளம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க கால மகளிர் 41.

தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவன் உண்டலின், நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே”

‘முற்றிய தயிரைப் பிசைந்த காந்தள் மலர் போன்ற மெல்லிய விரலைத் துடைத்துக் கொண்ட ஆடையைத் துவையாமல் உடுத்துக்கொண்டு, குவளை மலர் போன்ற மையுண்ட கண்களில் தாளிப்பினது புகை மணப்பத் தானே துழாவிச் சமைத்த இனிய புளிக்குழம்பைத் தன் தலைவன் இனிதென்று உண்பதனால் தலைவியின் முகமானது நுண்ணி தாய் மகிழ்ந்தது.’

இப்பகுதி,

‘ஏளது சுவைப்பினும் கீகை தொட்டது

வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென அடிசிலும் பூவும் தொடுதற் கண்ணும்’

என்ற தொல்காப்பியப் பகுதிக்கு (தொல். பொருளியல்-5) விளக்கம் போல அமைந்துள்ளது.

தனது செல்வமனையில் செல்வக்குடியிலே பிறந்த தன்னைப் பெற்ற தாய் ஒரு புறம் வீற்றிருப்ப, பிறிதொரு புறம் வளர்த்த தாய் தேன் கலந்த பாற்சோற்றினைப் பொற்கிண்ணத்தில் வைத்துக்கொண்டு, சிறுகோலோச்சி அச்சமூட்டவும், செல்வக் குடியிலே பிறந்த குழந்தை யாதலால் பசியற்ற காரணத்தால் உண்ண மறுத்துக் காற் சிலம்பொலிப்பத் தோட்டப் பந்தலில் ஒடி ஒடி விளை யாடும் தலைவி, இன்று புகுந்த வீட்டிலே வறுமையில் வாடிய போதும், தந்தை கொழுவிய சோற்றினை அனுப்பி வைக்கவும், அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துத் திருப்பி யனுப்பிவிடுகிறாள் என்ற செய்தியினை நற்றிணைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/43&oldid=1371507" இலிருந்து மீள்விக்கப்பட்டது