பக்கம்:கட்டுரை வளம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 கட்டுரை வளம்

இன்றுணை மகளிர்க் கின்றி யமையாக்

கற்புக் கடம் பூண்ட இத்தெய்வ மல்லது

பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்’

-சிலம்பு, அடைக்கலக் காதை . 137-144

பொறையுடைமை என்ற பண்பு பெண்களுக்கு மிகவும் இன்றியமையாது வேண்டப்படும். இதனை,

‘அன்புடைக் கணவர் அழிதகச் செயினும்

பெண்பிறந் தோர்க்குப் பொறையே பெருமை’

என்று ‘பெருங்கதை குறிப்பிடுகின்றது. பூமியினும் பொறையுடையாள் எங்கள் தாய்’ என்று பாரதியாரும் பாடினார் தாய் தன் குழந்தையை அடித்தால், அது, ‘அம்மா, அம்மா என்று சொல்லியே அழுகின்றது. அது போன்றே தலைவியும், தலைவன் பல கொடுமை செய்தாலும், அவனை விட்டுப்பிரிய மறுக்கிறாள் :

‘தாயுடன் றலைக்குங் காலையும் வாய்விட்டு

அன்னாய் என்னும் குழவி போல இன்னா செயினும் இனிதுதலை யளிப்பினும் நின்வரைப் பினளென் தோழி தன்னுறு விழுமங் களைளுரோ விலளே!’

-குறுந்தொகை, 377, 4-8

தலைவன் பரத்தை வீடுநாடிச் சென்ற போதும், மனைவி அத்துன்பத்தைப் பொறுத்திருந்தாள். இதனைக் கற்பிற் சிறந்த கண்ணகியின் வாழ்வில் காண்கிறோ மல்லவா?

சேர்கை யினியார்பாற் செல்வான் மனையாளாற்

காக்கை கடிங் தொழுகல் கூடுமோ கூடா தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார் இகழினுங் கேள்வரை யேத்தி யிறைஞ்சுவார்’

-பரிபாடல், 20 : 86-89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/46&oldid=1371589" இலிருந்து மீள்விக்கப்பட்டது