பக்கம்:கட்டுரை வளம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க கால மகளிர் 45

என்ற பரிபாடற் பகுதிக்குப் பின் வருமாறு பரிமேலழகர் உரை எழுதியுள்ளார். ‘பரத்தை பாற் சென்று தங்கு பவனை அங்ஙனம் செல்லாமற் காத்தலும், சென்றா னென்று நீக்கி ஒழுகுதலும் மனைவியாற் கூடுமோ? கூடா. சால்பு மிக்க கற்புடை மங்கையர் தம்மைக் கணவர் இகழ்ந்தாலும் தாம் அவரைப் போற்றுவர்’ என்று குறிப் பிட்டுள்ளார். இப்பகுதி கொண்டு சங்கால மகளிரின் பொறுமைப் பண்பினையும், நற்குண மேம்பாட்டி னையும் நாம் நன்றாக அறிந்து கொள்ளலாம்.

விருந்து போற்றும் வழக்கம் சங்ககால மகளிரிடம் சிறக்கவிருந்தது எனபதற்கும் பல சான்றுகளைக் காட்ட லாம் ‘விருந்தே புதுமை’ எனத் தனி அதிகாரம் ஒன்ற னையே அமைத்து, வள்ளுவர் வழி வழி வரும் விருந்தோம் பற் பண்பிற்குச் சிறப்பு வழங்கியுள்ளார். இச்சிறப்பினை, மறப்பருங் கேண்மையொ டறப்பரி சாரமும் விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்’

-சிலம்பு, மனையறம்படுத்த காதை : 85-86 எனச் சிலப்பதிகாரம் கூறும்.

‘அறவோர்க்கு களித்தலும் அந்தண ரோம்பலும்

துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை’

-சிலம்பு, கொலைக்களக் காதை : 71-73 என்று கண்ணகி வருந்துவதினின்றும்,

‘அருந்து மெல்லட காரிட

வருங்து மென் றழுங்கும் விருந்து கண்டபோ தென்னுறு மோவென்று விம்மும்; மருந்து முண்டுகொல் யான்கொண்ட

நோய்க்கென்று மயங்கும் இருந்த மாநிலஞ் செல்லரித்

திடவுமாண் டெழாதாள்’

-கம்ப, சுந்தர, காட்சிப் படலம் 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/47&oldid=1371598" இலிருந்து மீள்விக்கப்பட்டது