பக்கம்:கட்டுரை வளம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 கட்டுரை வளம்

கணவரைப் பிரிந்த மகளிர், மாலைக்காலத்தில் தம்மையே புணையாக, நெய்யை வார்த்து விளக்கு ஏற்றிக் கணவர் வரும் வரவு நோக்கி அங்காந்துள்ளனர் :

  • கயலே ருண்கண் கணங்குழை மகளிர் கைபுனை யாக நெய்பெய்து மாட்டிய அரும்பெறற் காதலர் வந்தென விருந்தயர்பு சுடர்துய ரெடுப்பும் புன்கண் மாலை மெய்ம்மலி யுவகையின் எழுதரும் கண்கலிழ் இகுபனி யரக்கு வோரே’

-குறுந்தொகை; 398 : 3-8

மனைக்குவிளக் காகிய வாணுதல் நணவன் முனைக்கு வரம் பாகிய வென்வேல் நெடுங்தகை’

-புறநானுாறு, 315 : 1-2

என்பதற்கிணங்கப் போர் மேற் சென்ற தலைவன், போரில் இறந்துபட்டால் மனைவி உயிர் வாழ ஒருப்படாள். கைம்மை நோன்பு நோற்று, அல்லியரிசியாலாகிய எளிய உணவை உண்டு, பாயின்றி வெறுந்தரையில் படுத்து, குளிர்நீரில் குளித்து வாழும் வாழ்வினை மகளிர் விரும் பினாரில்லை. இதனைப் பூதப்பாண்டியன் பெருந்தேவி கூற்றால் அறியலாம்:

அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்க் தட்ட

காழ்போல் கல்விளர் நறுநெய் தீண்டாது அடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம் வெள்ளெட் சாங்தொடு புளிப்பெய் தட்ட வேளை வெங்தை வல்சி யாகப் பாற்பெய் பள்ளிப் பாயின்று வதியும் உயவற் பெண் டிரேம் அல்லேம் மாதோ’

-புறநானுாறு, 246 : 4-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/50&oldid=1373285" இலிருந்து மீள்விக்கப்பட்டது