பக்கம்:கட்டுரை வளம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க கால மகளிர் 49

என்று கூறுவதோடு, காதலனின் எரிதீ நள்ளிரும் பொய்கை யாகக் குளிர்ந்து தோன்றும் என்றும் கூறியுள்ளார் :

‘பெருங்தோட் கணவன் மாய்ந்தென அரும்பற

வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை நள்ளிரும் பொய்கையும் தீயுமோ ரற்றே”

-புறநானுாறு 246 : 13-15

கணவனை இழந்த மகளிர் ஆதரவற்ற நிலையில் பிறர் உதவியினை எதிர்பாராது, பருத்திப் பஞ்சினை நூலாக நூற்றுத் தம் குடும்பத்தினை ஒம்பி வந்தனர். இவர்களைப் பருத்திப் பெண்டிர் என்று சங்க இலக்கியங்கள் குறிப் பிடும்.

ஈன்று புறந்தருதல் தாயின் கடமையாகும். மேலும் அவர்கள் வீரத்தில் மேற்பட்டவர்களாக எதிர்காலத்தில் விளங்கத் தாயே துணை நிற்றல் வேண்டும். மறக்குடி மகளிர் தம் இயல்பும் வீரமிகுதியும் கூறும் துறை, மூதில் முல்லை’ என்பதாகும். வீரக்குடியிற் பிறந்த மகளிர் மூதில் மகளிர்’ எனப் போற்றப்பெற்றனர். மறக்குடியிற் பிறந்த பெண்ணொருத்தி, முதல்நாட்போரில் தன் தமை யனும், மறுநாட்போரில் தன் கணவனும் மடிந்த நிலை யில், தன் குடிக்கு ஒருவனாயுள்ள இளஞ்சிறுவனை வேல் கைக்கொடுத்துச் செருமுகம் நோக்கிச் செல்க’ என அனுப் பினாள் என, ஒக்கூர் மாசாத்தியார்’ என்ற பெண்பாற் புலவர் கூறுகிறார்.

‘கெடுக சிங்தை! கடிதிவள் துணிவே!

மூதின் மகளி ராதல் தகுமே” மேனாள் உற்ற செருவிற் கிவள் தன்னை யானை யெறிந்து களத்தொழிங் தனனே! நெருகல் உற்ற செருவிற் கிவள் கொழுநன் பெருநிரை விலக்கி யாண்டுப்பட்டனனே! க. -4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/51&oldid=1373287" இலிருந்து மீள்விக்கப்பட்டது