பக்கம்:கட்டுரை வளம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டுரை வளம்

இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல் கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப் பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி ஒருமகன் அல்லது இல்லோள் செருமுக நோக்கிச் செல்கென விடுமே!’

- புறநானுாறு : 219

இவ்வாறு சங்க கால மகளிர் காதலேயன்றி வீரத்தினும் மேம்பட்டு விளங்கினர். நல்ல மனைவியைப் பெற்ற கணவனையே புலவர் போற்றினர். ஒர் ஆடவனைப் புலவர் போற்றும்போது, அவன் மனைவியின் சிறப்பு நோக்கியே பாராட்டினார். திருமுருகாற்றுப் படையில் திருமுருகனை மறுவில் கற்பின் வாணுதல்

“நக்கீரர்’ கணவன்’ என்றே பாராட்டியுள்ளார். இந்த நல்ல மங்கையினுடைய கணவன் பாராட்டியுள்ளார் ‘இந்த

நல்ல மங்கையினுடைய கணவன் யான் என்று கூறிக் கொள்வதில் அக்கால ஆடவன் பெருமை கொண்டனன்.

“நல்லோள் கணவன் இவனெனப்

பல்லோர் கூறயாம் நாணுகஞ் சிறிதே’

-குறுந்தொகை 14 : 5-6

எனவே மனைத்தக்க மாண்புடையளாகவும், தற் கொண்டான் வருவாய்க்கு ஏற்பச் செலவு செய்பவளாகவும் வாழ்த்கைத்துணை ஒருவனுக்கு வாய்க்குமேயானால், அவன் நிறைவாழ்வு வாழலாம். இதனாலன்றோ

வள்ளுவர் பெருமானும்,

“புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை.”

-திருக்குறள் 59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/52&oldid=1373291" இலிருந்து மீள்விக்கப்பட்டது