பக்கம்:கட்டுரை வளம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 கட்டுரை வளம்

படுத்திவிடும். கண்களிலிருந்து காதல் பிறக்கிறது என்று பல நூல்களும் நுவலா நிற்கும் கருத்தினை,

“கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின்(வாய்ச்சொற்கள்

என்ன பயனு மில’

-திருக்குறள் : 1.100

என்ற குறளால் அறியலாம். பின்னர், தலைவன் தன் கண் ணொடு கலந்து கருத்தொடு நிறைந்த காதலியின் பண்பு நலனைப் பலப்படப் பாராட்டி மொழிவான்.

‘கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்டொடி கண்ணேயுள’

-திருக்குறள் :1200

என்று ‘தனக்குக் காதல் நோய் தந்த காரிகையே அந் நோயைத் தீர்க்கும் அருமருந்தாவள்’ என்றும், தலை மகளின் அழகு நலம் பாராட்டி அகமகிழ்வான்.

இன்னணம் பலவாறு மனமகிழ்ந்த தலைவன் அவள் நலம் புனைந்துரைக்க முற்படுவான் அனிச்சமலரைப் பார்த்து ‘மென்மை நிறைந்த அனிச்சம் பூவே! நின்னினும் என் காதலி மென்மை நிறைந்தவள்’ என்றும் மலரில் தேனுண்டு திளைக்கும் வண்டு தன் தலைவியின் கண் களைக் கருங்குவளை என்றும், கையினைக் காந்தள் என்றும், கொவ்வைச் செவ்வாவைக் கொழுமை நிறைந்த ஆம்பல் மலரென்றும் கூறிச் சுழன்று திகைப்பதாகவும்’ கூறுவான் பின்னர் விண்ணிலே தண்ணொளி வீசி வலம் வரும் வெண்மதியை விளித்து நோக்கி, "மதியே மலர் போன்ற கண்களையுடைய இவள் முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன் றாதே" என்று கூறுவான். தலைவனும் தலைவியும் தங்கள் காதற் சிறப்புரைத்துக் கொள்வார்கள். தலைமகன் உயிருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/66&oldid=1374608" இலிருந்து மீள்விக்கப்பட்டது