பக்கம்:கட்டுரை வளம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் வகுக்கும் இன்பம் 67

இவ்வண்ணம் பலகாலும் களவு வழியே இன்பம் நுகர் வதால், அஃது எங்கே நற்றாய், உற்றார், செவிலிக்குத் தெரிந்து, ஊரில் அலர் எழுந்து விடுமோ வென்று தோழி, தலைவியை மணம் புரியுமாறு தலைவனை வேண்டுவாள். தலைவனோ, வரைவு நீட்டித்திருப்பான். பிரிவுத் துயரால் நாளுக்கு நாள் தலைவி 'நீரற்ற புலம்’ போலவும், 'பொரு ளில்லான் இளமை போலவும், 'அறஞ்சாரான் மூப்பே போலவும் மெலிவாள். இதனையுணர்ந்து, மகளின் வேறு பாட்டிற்குக் காரணம் யாதோ’ என்று கேட்ட தாய்க்குத் தோழி, தலைவன் மலர் கொடுத்ததையும், இடர் தீர்த்ததை யும், புனலிலிருந்து புணையாய் நின்று காப்பாற்றியதை யும் கூறுவாள். தாய் கற்புக்கடம் பூண்ட தலைவிக்குக் கடிமணம் செய்யாவிடின், வேற்று வரைவு நேர்ந்து நொது மலர் வாழ்க்கை எய்தும்; அதனால் காதலர் இருவரும் வெளியேறி விடுவர். பின்னர்க் குரவர்கள் உவக்கத் திருமணம் செய்து கொண்டு, நல்லறமாம் இல்லறத்தைத் தொடங்குவார்கள்.

இவ்வாறு கருத்தொன்றிக் கண்ணும் ஒளியும், மலரும் மணமும் போலக் காதலிருவர் வாழ்ந்துவரும் நாளில் தலைவன் அறுவகைக் காரணங்களால் தலைவியை விட்டுப் பிரிதல் உண்டு. பிரியுங்காலை தலைவன் தலைவியை அடுத்துத் தன் பிரிவுணர்த்தினால்,

“செல்லாமை உண்டேல் எனக்குரை; மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை.”

-திருக்குறள் : 1151

என்று மறுமொழி கிடைக்கும். அப்படித் தவைவன் பிரிந்த பின்னர், “தீயோ, தொட்டாரையன்றி மற்றவரைக் சுடாது; ஆயின், காதலன் பிரிவோ, அவன் விட்டு நீங்கிய காலத்தும் சுடுகிறதே! என்பாள். காதல்நோயினைத் தனக் குள் மறைத்தலும் இயலாமல், பிறர்க்கும். உரைத்தலும் இயலாமல் சுழல்வாள்; 'பிரிவுக்கடலைக் கடக்குமுகத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/69&oldid=1374616" இலிருந்து மீள்விக்கப்பட்டது