பக்கம்:கட்டுரை வளம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் வகுக்கும் இன்பம் 69

‘ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்.” - .*

-திருக்குறள் : 1339

குறள் இக்கருத்தை வலியுறுத்துகின்றது. தன் கலைவன் பொதுமகளிரோடு கூடிக்களிப்பதைக் காதலி காண ஒருப்படாள்.

'வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்

பூரியர்கள் ஆழும் அளறு.

-திருக்குறள் : 919

என்ற குறளில் வள்ளுவர் பரத்தையொழுக்கத்தை இடித் துரைக்கிறார். இவ்வாறு ஊடல் நிகழ்ந்த காரணத்தைத் தோழி கேட்ட பொழுது, தலைவன், நான் இம்மையிற் பிரியோம்’ என்றேன்; மறுமையில் பிரிவீர்கொலோ?” என்று தலைவி புலந்து அழுதாள்,” என்பான். மேலும் ‘'நான் உன்னை நினைத்தேன்’ என்றேன்; அதற்கு அவள் ‘இடையே சின்னாள் மறந்து பின்னர் நினைத்தீரோ என்று ஊடினாள்” என்பான். ஒருமுறை அவளிடைத் தும்மிய பொழுது எப்பெண் உம்மை நினைக்க நீவிர் தும்முகிறீர்!’ என்று கூறி ஊடினாள்’ என்றும், பிறி ‘கொருமுறை தும்மலை மறைத்தபொழுது, ‘எப்பெண்

உம்மை நினைத்ததை நான் அறியாமல் மறைக்க முயல்கிறீர்’ என்றாள்’ என்றும், பலவாகக் கூறுவான் தலைவன். ஊடிக்கூடலே காதலர்களுக்குக் கழிபேருவகை தருவதாகும.

‘உணலினும் உண்டது அறல் இனிது காமம்

புணர்தலின் ஊடல் இனிது”

-திருக்குறள் :1326

என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/71&oldid=1374625" இலிருந்து மீள்விக்கப்பட்டது