பக்கம்:கட்டுரை வளம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 கட்டுரை வளம்

எனவேதான் அடியார்க்கு நல்லாரைச் சிறப்பித்துப் பேசும் அடியார்க்கு நல்லார் உரை சிறப்புப் பாயிரம்:

‘காற்றைப் பிடித்துக் கடத்தி லடைத்தக் கடியபெருங்

காற்றைக் குரம்பைசெய் வார்செய்கை போலுமற் காலமெனும் கூற்றைத் தவிர்த்தருள் பொப்பண்ணகாங்கெயர்கோனளித்த சோற்றுச் செருக்கல்ல வோதமிழ் மூன்றுரை சொல்வித்ததே”

-சிலம்பு அடியார்க்கு நல்லாாருரைச் சிறப்புப்பாயிரம் : 3

எனக் குறிப்பிட்டுள்ளது. சிலப்பதிகாரம் நமக்குப் பழைய இசை மரபினைத் தெரிவிப்பதாய் உள்ளது.

இசை என்ற சொல்லுக்கு இசைவிப்பது, வயப்படுத்து வது, ஆட்கொள்வது’ என்பன பொருளாகும். எல்லாம் கடந்து எங்குமாய் எல்லாமாய் நீக்கமற நிறைவுற்று விளங்கும் இறையவனையே நம் முன்னோர் இசை வடிவ மாகக் கண்டனர். ‘ஒசை ஒலியெலாம் ஆனாய் நீயே” என்பது திருவாசகம். மேலும், கோவை நூல்களுள் சிறப்பித்துக் கூறப்பெறும் திருச்சிற்றம்பலக் கோவையார் எனப்படும் திருக்கோவையாரில் (20). சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென் (சிந்தையுள்ளும்

உறைவானுயர்மதிற் கூடலி னாய்ந்தவொண் டிந்தமிழின் துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந் தெய்தியவே!

என்று கூறப்படுகின்றது. ஏழிசையின் சூழலில் இறைவன் ஈடுபட்டான் என்பது இதனால் பெறப்படுகின்றதன்றோ!

தமிழின் மிகப் பழைய நூலான தொல்காப்பியம் கொண்டே தமிழ் இசையின் பழமையினை அறிய முடியும். தொல்காப்பியனார் எழுத்ததிகாரத்தின் முதல் இயலான நூன்மரபியலின் இறுதி நூற்பாவில் (33),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/74&oldid=1374842" இலிருந்து மீள்விக்கப்பட்டது