பக்கம்:கட்டுரை வளம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76 கட்டுரை வளம்

விளரி, தாரம்’ என்பனவாம். இவற்றை வடமொழியில் ஸட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று குறிப்பிடுவர். தமிழில் பண் என்பதை வடமொழியில் இராகம் என்பர், திருவள்ளுவர். “பண்ணென்னாம் பாடற் கியைபின்றேல்; கண்ணென்னாங் கண்ணோட்ட மில்லாத கண்.” என்ற குறளில் (573) 'பண்’ என்ற சொல்லைக் கையாண் டுள்ளார். எழுசுரங்களால் ஆகிய இராகங்களைப் பண் என்றும் ஆறு சுரங்களால் ஆகியவற்றைப் பண்ணியல் என்0றும், நான்கு சுரங்களால் ஆகியவற்றைத் திறம் என்றும் மூன்று சுரங்களால் ஆகியவற்றைத் திறத்திறம் என்றும் இசை இலக்கண நூலார் கூறுவர். வடமொழியாளர் இவற்றை முறையே சம்பூரணம், ஷாடவம், ஒளடவம், சதுர்த்தம் என வழங்குவர்.

சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் பழந்தமிழ் இசையின் நுட்பம் தெற்றெனப் புலப்படுத்தப் பட்டிருக் கின்றது. மேலும் கானல் வரி'யால் விளங்கும் ஆற்றுவரி, சார்த்துவரி, முகமில்வரி, கானல்வரி, நிலை வரி, முரிவரி, தினைநிலை வரி, மயங்குதினை நிலைவரி, சாயல் வரி, முதலிய பல்வேறு வரிப்பாடல்கள் இசையின் மேன்மை யினையும் விரிவினையும் விளக்கவல்லன சமணப் பெருங் காப்பியமான ‘சீவக சிந்தாமணி'யில், காந்தருவ தத்தையார் இலம்பகத்தில் இடைக்காலத் தமிழிசையினைப் பரக்கக் காணலாம். மதம் பிடித்த யானையின் சீற்றத் தினை இசையால் தணிவித்த செய்தி,'உதயணன் கதை'யில் பேசப்படுகின்றது.

இவ்வனைத்திற்கும் மேலாகச் சமய குரவர்கள் அருளிச்செய்த தேவாரத்தில் தமிழிசையின் முழுமறுமலர்ச் சியினையும் காண்கிறோம். நாளும் இன்னிசையால் தமிழ். பரப்பிய ஞானசம்பந்தர், தாண்டக வேந்தராம் திருநாவுக்கரசர், தம்பிரான் தோழராம் சுந்தரமூர்த்தி ஆகியோர், 'கழகமொடமர்ந்த கண்ணுதற் கடவுளை'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/78&oldid=1376033" இலிருந்து மீள்விக்கப்பட்டது