பக்கம்:கட்டுரை வளம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இசையின் தொன்மையும் வளர்ச்சியும் 81

திருஞான சம்பந்தர் காலத்திலேயே அவரோடு திரு நீலகண்ட யாழ்ப்பாணரும், அவர் மனைவியார் ‘மதங் கசூளா மணியாரும் சீகாழிப்பதி போந்து, சம்பந்தரை வணங்கி, அவர் பாடியருளிய தேவாரப் பதிகங்களைத் தம் யாழில் இசைத்துப் பின்னர்த் தமிழ்நாடெங்கும் சென்று அத்தெய்வப் பாடல்களை இசையுடன் பரப்பினர் என்பது வரலாறாகும். இன்றளவும் இந்தப் பழந்தமிழ்த் தேவார இசையினை விடாது போற்றிக் காத்து வருபவர் கள் ஒதுவாமூர்த்திகளேயாவர். அவர்களுக்குத் தமிழிசை உலகு நன்றிக்கடன்பட்டுள்ளது.

பிற்காலத்தில் - அதுவும் நாயக்க மன்னர் காலத்தில்இசை பல்வேறு வகையில் வளர்ந்தது. கி.பி. 14-ஆம் நூற் றாண்டில் வாழ்ந்த அருணகிரி நாதர் சந்தப் பாடல் களால் ஆன திருப்புகழை இயற்றினார். பழம் பண்கள் மறக்கப்பட்டு இராகங்கள் வந்து சேர்ந்தன. மேலும் இராகங்கள் பழைய பண்களிலிருந்து அமைந்து வளர்ந்த வையே என்னும் உண்மை புறக்கணிக்கப்பட்டது. கர்நாடக இசை, தென்னாட்டு இசைக்கலை என்பதும் தமிழ்ப் பெருமக்களின் பரம்பரைச் சொத்து என்பதும் ஏற்றுக்கொள்ளப்படாமற் போயின. கர்நாடக இசை என்றால், தெலுங்குப்பாட்டுகள் என்ற அளவிற்கு ஒரு மயக்கமான நிலை ஏற்பட்டது. தெலுங்கைத் தாய்மொழி யாகக் கொண்ட 'தியாகையர்’ தெலுங்கில் கீர்த்தனங்கள் இயற்றினார், சாகித்தியங்களை உருவாக்கினார். இது போன்றே சீர்காழி அருணாசலக் கவிராயர் தமிழில் ‘இராம நாடகம்’ எனும் இயல் இசைத்தமிழ் நூலை இயற்றினார். கோபாலகிருஷ்ண பாரதியார் நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளை இயற்றி இசைத் தமிழிற்குத் தொண்டாற்றினார். முத்துத் தாண்டவரும் நெஞ்சைத் தொடும் நல்ல கீர்த்தனைகளை இயற்றி உதவினார். மேலும் ‘திருக்குற்றாலக் குறவஞ்சி’ இயற்றிய திரிகூட ராசப்பக் கவிராயர், கனம் கிருஷ்ணையர், கொட்டையூர்ச்

க.-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/83&oldid=1376060" இலிருந்து மீள்விக்கப்பட்டது