பக்கம்:கட்டுரை வளம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86 கட்டுரை வளம்

அடிகள் மனமின்றியே கூறிச் செல்வதாகத் தெரிகிறது. எனவே நாம் அவர்கள் வாழ்வில் புகுந்து இதற்குரிய காரணத்தைக் காண்போம்:

நெய்தலங்கான லிலே காணும் கோவலனுக்கும், 'வடு நீங்கு சிறப்பின் மனையகம் துறந்து, கூனியின் கைமாலை வாங்கி, மாதவி மனை புகுந்த கோவலனுக்கும் மன வளர்ச்சியில், பெரியதொரு வேறுபாடு இருந்ததாக நாம் கூற இயலாது. அன்று கண்ட அதே கோவலனையே நாம் இன்றும் காண்கிறோம். அறிஞன், அழகன், கலைஞன், சுவைஞன் ஆகக்கோவலன் விளங்கினாலும், அவனிடம் கொழுமைக்கூட்டுணர்வில் எழுகின்ற ஒர் ஒற்றுமை மனப் பான்மை-ஒரு நிறைவுடைமை - இவற்றைக் காண் கிறோம். மணிமேலை என்ற பெண்ணை மாதவி மணி வயிற்றிலிருந்து பெற்றிருப்பினுங்கூட, அவன் மனம் வயதுக்கேற்ப வளர்ந்து நிற்கவில்லை. அதற்கு மாறாக, மாதவியானவள் தன் தாய்மைப் பண்பில் ஊறித் திளைக் கிறாள். உலகின் பேராரவாரத்தில் கோவலன் ஈடுபட் டிருக்கிறான். மாதவியோ, தன்னைக் கலையினுள் அமிழ்த்திக் கொள்கிறாள்.

இனி அவன் பாடிய பாட்டைக் காண்போம். இந்திர விழவூரெடுத்த காதையிலும், கடலாடு காதையிலும் கோவலன் மாதவிபால் ஊடலோடு இருந்ததாகக் கூறப் படுகிறது. அப்பொழுது அவன் உள்மனத்தை ஏதோ ஒர் எண்ணம் அரித்து அலைத்துக் குலைத்து வந்திருக்கிறது. அது கண்ணகிபாற்சென்ற எண்ணமாகவும் இருக்கலாம்; அன்றேல், தன் வறுமை நிலையைப் பற்றிய வாட்டமாக வும் இருக்கலாம்.

“திங்கள் மாலை வெண் குடையான்

சென்னி செங்கோ லதுவோச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/88&oldid=1376081" இலிருந்து மீள்விக்கப்பட்டது