பக்கம்:கட்டுரை வளம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 கட்டுரை வளம்

கடந்தும் கீழ்த்திசை நாடான கம்போடியா நாட்டிலும் ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே கோயில்களில் படிக்கப்படும் அளவிற்குப் பரவியிருந்தன என்பது தெரிய வருகிறது. கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் 'சம்பா’ என்னும் இடத்தில் பாரதத்தை வடமொழியில் செய்த ‘வியாச முனிவ'ருக்கு ஒரு கோயில் கட்டப்பட்டிருந்தது. என்பது சாசனங்கள் வழி அறியக்கிடக்கின்றது. அதே போன்று ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சம்பாவில் வான்மீகி முனிவருக்குக் கோயில் ஏற்பட்டிருந்தது என்ற செய்தியும் அறியத் தக்கது. சுமித்திரா ஜாவா முதலிய துாரக்கிழக்கு நாடுகளில் இவ்விரு கதைகளும் அந்த நாளிலேயே நன்கு வழங்கின.

முதற்கண் பாரதக்கதையின் பழமையினையும், அக் கதை பழந்தமிழ் இலக்கியங்களில் எத்தகைய குறிப்பு களைக் கொண்டிலங்குகின்றது என்பதனையும் காண்போம் பாரதத்தினை நான்கு வேதங்களோடு ஒருங்கு வைத்து 'ஐந்தாம் வேதம்’ என மக்கள் போற்றி வந்தமை யினைப் 'பாரத பஞ்சமோ வேத:’ என்ற பழந்தொடர் கொண்டு அறியலாம். மேலும், வில்லி பாரதத்தின் சிறப்புப் பாயிரப்பாடல்,

‘நீடாழி உலகத்து மறைகாலொ

டைந்தென்று நிலைநிற்கவே

வாடாத தவவாய்மை முனிராசன்

மாபார தம் சொன்னநாள்’

என்று குறிப்பிடுவது கொண்டும் இவ்வுண்மையினை உணரலாம். மாபாரதம், மகாபாரதம் என்ற தொடர் களாலேயே பாரதம் வழங்கப்பெறுவது இதன் பழமை யினையும்ப பெருமையினையும் மேலும் மேலும் வலியுறுத்தும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/94&oldid=1377335" இலிருந்து மீள்விக்கப்பட்டது