பக்கம்:கட்டுரை வளம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியங்களில் இதிகாசக் கருத்துக்கள் 95

பாரதக்கதை நிகழ்ச்சிகள் பல கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகை"யில் எடுத்துக் காட்டுகளாய்க் கூறப்பட் டுள்ளன.

வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால் ஐவரென்று உலகேத்தும் அரசர்கள் அகத்தரா கைபுனை அரக்கு இல்லைக் கதழெரி சூழ்ந்தாங்குக் களிதிகழ் கடாஅத்த கடுங்களிறு அகத்தவா முளிகழை உயர்மலை முற்றிய முழங்கழல் ஒள்ளுரு அரக்கில்லை வளிமகன் உடைத்துத்தன் உள்ளத்துக் கிளைகளோடு உயப்போகு வான்போல்:

-கலி. 25 : 11-18

என்னும் பகுதியில் அரக்கு இல்லில் ஐவரைக் குடிபுகச் செய்து துரியோதனன் இரவில் அதற்குத் தீயிட்ட செய்தி யும், அப்பேராபத்திலிருந்து வீமன் தன் கிளைஞரைக் காப்பாற்றியதும்,

‘அஞ்சீர் அசையில் கூந்தற்கை நீட்டியான்

நெஞ்சம் பிளந்திட்டு கேரார் நடுவண் தன்

வஞ்சினம் வாய்த்தானும், போன்ம்.’

-கலி, IOI : 18-20

என்ற பகுதியில், துச்சாதனன் திரெளபதியின் கூந்தலைப் பற்றியதும், அவனது நெஞ்சத்தை வீமன் பிளந்ததும்,

“மறந்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனைக் குறுங்கறுத் திடுவான் போல்’

-கலி, 2-3

என்ற பகுதியில், துரியோதனன் தொடையை வீமன் முரித்த செய்தியும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/97&oldid=1377346" இலிருந்து மீள்விக்கப்பட்டது