பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

boolean dat 99 boot

குறிப்பிடுவதற்குப் பதிலாக காரண காரிய உறவுகளைப்பற்றி ஆராய்வது. மின்னணு கணினி தொடர் பொத்தானிடுதல் போன்ற துறைகளில் வெளியே தெரியாமல் இருந்ததுறை. மின்னணு கணினியின் காரண - காரிய வடிவமைப்பில் ஒரு முக்கியபிரிவாக உருவாகி உள்ளது. ஜார்ஜ் பூலேவுக்காக இவ்வாறு பெயரிடப்பட்டது.

boolean data : பூலியன் தகவல் : ஆமாம்/ இல்லை அல்லது உண்மை / பொய் தகவல்.


boolean equations : பூலியன் சமன்பாடுகள் : செட் கொள்கை இயக்கங்கள், யூனியன் போன்றவற்றைப் பயன்படுத்துதல்.

boolean expression : பூலியன் சொற்றொடர்; தொனி பாவக் குறிகள், பூலியன்கோவை: பூலியன் இயக்கிகளின் மூலம் உண்மை அல்லது பொய் என்ற இரண்டில் ஒன்றை குறிக்கும் சொற்றொடர்.

boolean logic : பூலியன் தருக்கம் : 19ஆம் நூற்றாண்டின் நடுவில் ஜார்ஜ் பூலே என்ற ஆங்கிலக் கணிதமேதை உருவாக்கிய தருக்கக்கணிதம். அதன் விதிகளும், இயக்கங்களும் எண்களுக்குப் பதிலாக தர்க்கப் பணிகளை ஆற்றுகின்றன. AND, OR, NOT ஆகியவையே பூலியன் இயக்கத்தின் அடிப்படைகள்.

Boolean operator: பூலியன் இயக்கி: அளவை இயக்கி இதன் இயக்கங்கள் மற்றும் முடிவுகள் இரண்டு மதிப்புகளில் ஒன்றாகவே அமையும்.

boolean search : பூலியன் தேடல் : குறிப்பிட்ட தகவல்களைத் தேடல். பூலியன் இயக்கிகளான AND, OR, NOT ஆகியவைகளைப் பயன்படுத்தி எந்த ஒரு நிலையையும் தேட முடியும்.

boolean variable : பூலியன் மாறி; பூலியன் மாறுவகை : உண்மை அல்லது பொய் என்ற இரண்டு மதிப்புகளை மட்டுமே கொண்டுள்ள ஆணைத்தொடர் மாறி.

Boole, George 1815 - 1864 : பூலே, ஜார்ஜ் : 1815-1864 : ஆங்கில அளவையியல் மற்றும் கணிதவியல் அறிஞர். 1847இல் அளவையியலை கணித முறையில் ஆய்வது என்று ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டார். 1851இல் அளவை அமைப்பைப் பற்றிய முதிர்ச்சிமிக்க சிந்தனை விதிகளின் ஆய்வு என்ற அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். இதில் அளவையியல் பற்றிய கணித கொள்கைகள் உருவாக்கப்பட்டன.

bookman : புக்மேன்: ஒருவகையான அச்செழுத்து. ஐடிசி நிறுவனம் உருவாக்கிய ஒரு அச்செழுத்து வகை.

boot : ஏற்று; இயக்கு: Bootstrap என்பதில் இருந்து எடுக்கப்பட்ட சொல். கணினியின் இருப்பகச் சாதனத்தின் மூலம் ஆணைகளைப் படித்து ஒரு கணினியின் நினைவகத்திற்கு அனுப்புவது அல்லது மீண்டும் கணினியைத் துவங்குவது. ஏற்கனவே கணினி இயங்கிக் கொண்டிருக்கும் போது அதனை இயக்கும் முறையை முதன்மை நினைவகத்திற்கு அனுப்புவது. சூடான ஏற்றுதல் இல்லையென்றால் ஆறிப்போன ஏற்றுதல்.

boot Disk: ஏற்றுவட்டு: வட்டு இயக்கக் கணினிகளைத் துவக்கும் போது துவக்கும் பதிவு என்றும் அழைக்கப்படுவதுண்டு - வட்டில் சேமிக்கப்படுகிறது. வட்டு இயக்க அமைப்பைப் பயன்படுத்தும் ஒரு கணினியானது ஏற்றும் பதிவகத்தை அணு