பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bus sys 110 byte

bus system : மின் இணைப்புத் தொகுதி அமைப்பு : கணினி உள்ளே தகவல்கள் போவதற்கு வகை செய்யும் பாதைகளின் கட்டமைப்பு. மின் இணைப்புத் தொகுதி, கட்டுப்பாட்டு மின் இணைப்புத் தொகுதி முகவரி யுடன் இணைப்புத் தொகுதி, ஆகியவை கணினியில் முக்கிய மின் இணைப்புத் தொகுதிகளாக அடை யாளம் காணப்படுகின்றன.

bus toplogy : மின் இணைப்புத் தொகுதி அமைப்பியல் : மின்னணு கட்டமைப்பு கட்டுமானத்தை விளக்குவது.

business computer : வணிகக்கணினி: வணிகப்பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் கணினி .

business data processing : வணிக தகவல் செயலாக்கம் : சம்பளப்பட்டி, வரிசைப்படுத்தல் மற்றும் கணக்கிடு தல் போன்ற வணிக நோக்கங்களுக் கான தகவல் செயலாக்கம்.

business information processing : வணிக தகவல் செயலாக்கம் : வணிகச் சூழ்நிலையில் தகவல் செயலாக்கம் மற்றும் பரிமாற்றத்தை விளக்கும் ஒரு பொதுச்சொல். விலைப்பட்டி யல் தயாரித்தல் அல்லது விமான டிக்கட்டுகள் போன்ற பயண முன் பதிவுகள், காசோலை ரத்து, சம்பளப் பட்டி வெளியீடு போன்றவை எடுத் துக்காட்டுகள்.

business oriented programming language : வணிகம் சார்ந்த ஆணைத் தொடர் மொழிகள் : வணிகப் பயன் பாடுகளுக்காக பேரளவு தகவல் கோப்புகளைக் கையாளும் வகை யில் வடிவமைக்கப்பட்ட ஒரு மொழி.

Button : பொத்தான் : சுட்டுக் கருவி யினால் கிளிக் செய்தால் திரையில் ஒரு இடத்தில் ஒரு செயலைத் துவக் கவோ அல்லது நிறுத்தம் செய்யவோ அதிகம் பயன்படுத்தப்படுவது.

bypass : மாற்றுவழி : ஒரு மின்சுற்றில் ஒன்று அல்லது பல பொருள்களைச் சுற்றிச் செல்லும் இணைவழி.

bypass capacitor : மாற்றுவழிதாங்கி: மின்சக்தி வழங்குதலின்போது ஏற் படும் மின்சார இரைச்சலைக் குறைக்க உதவும் தாங்கி.

Byron Lady Ada Augusta : பைரன் அடா அகஸ்டா சீமாட்டி : லவ்லேஸ் பெருமகள் என்று அழைக்கப்படு பவர். புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் பைரன் பிரபுவின் மகளே செல்வி பைரன். சார்லஸ் பாபேஜீடம் அவர் நெருங்கிப் பணியாற்றி, அவரது பகுப்பு எந்திரத்திற்கு ஒரு விளக்க ஆணைத் தொடரை கொடுத்தார். உலகின் முதல் ஆணைத் தொடராளர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவர். அடா என்னும் ஆணைத்தொடர் மொழி அவரது நினைவாக பெயரிடப்பட்டது.

byte : பைட் ; எட்டியல்; எண்துண்மி : 1. கணினியில் ஒரு தனி அலகாக செயல்படும் அடுத்தடுத்துள்ள இரும இலக்கங்களின் தொகுதி. மிக அதிக மாகக் காணப்படும் எண்துண்மியில் எட்டு இரும இலக்கங்கள் இருக்கும். 2. ஒரு தனி எழுத்தைக் குறியீடு