பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cartesian

120

cascade


cartesian coordinate system : கார்டீசியன் ஒருங்கிணைப்பு அமைப்பு; கார்டீசியன் ஆயமுறை : ஃபிரெஞ்சு கணிதவியலார் ரெனி டெஸ்கார்ட் கார்டீசியன் பெயரில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. இதன்படி தளத்தில் உள்ள ஒரு புள்ளியின் தூரம் இரண்டு நேர்கோடுகளில் இருந்து கணக்கிடப்படுகிறது, அச்சுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு அச்சிற்கான தூரமானது மற்றொரு அச்சிற்கு இணையாகக் கணக்கிடப்படுகிறது. புள்ளியுடன் தொடர்புள்ள இந்த எண்கள் அந்த புள்ளியின் ஒருங்கிணைப்புகள் எனப்படும். இது செவ்வக ஒருங்கிணைப்பு அமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது.

cartridge : நாடா பேழை; பேழை; பொதியுறை : ரோமில் நிரந்தரமாகச் சேமிக்கப்படும் மென் பொருளைக் கொண்டுள்ள தனிப்பேழை வசதியான, நீண்ட காலம் வரக்கூடிய, பயன்படுத்த எளிதான, ஒசையற்ற, அழிக்க முடியாத இயக்கப் பெட்டியைக் கணினியில் கட்டப்பட்டுள்ள ஒரு சிறப்பு இடத்தில் நுழைக்கப்படும் பேழை. வட்டிலோ, நாடாவிலோ படி எடுக்க முடியாது. solid state cartridge என்றும் Rom Cartridge என்றும் அழைக்கப்படுகிறது.

cartridge disk unit : நாடா பேழை வட்டு சாதனம் : சேமிப்பகச் சாதனம். இதில் இரு வகை வட்டுகள் உள்ளன. ஒன்று நிலையாக நிற்பது. மற்றொன்று மீண்டும் பயன்படுத்தப்படுவது.

cartridge font : பொதியுறை நாடா எழுத்துரு : அச்சுப் பொறியில் நேரடியாகப் பொருந்தும் பொதியுறை நாடாவில் உள்ள ஒரு எழுத்துரு. லேசர் அச்சுப் பொறிகளில் இவை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. எச்.பி லேசர் ஜெட் குடும்பம் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டாலும் சில புள்ளி வரிசை அச்சுப் பொறிகளிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

cartridge tape : பொதியுறை நாடா : இது 8 மி.மீ அகலமுள்ள ஒரு காந்த நாடா. 12x12 செ.மீ அளவுள்ள குழைம (பிளாஸ்டிக்) உறையில் வைக்கப்பட்டுள்ளது. முதன்மை பொறியமைவுக் கணினிகளில் இவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவை தொடர் அணுகுமுறை அடக்க தகவல் சேமிப்பகத்தை அளிக்கின்றன. 2000 மீமிகு எட்டியல் (மெகா பைட்) சேமிப்பகம் வரை அவைகளுக்குக் கிடைக்கிறது. தனிமுறைக் கணினிகளில் 60-100 மீமிகு எட்டியல் (Mega byte) அளவில் திறனுடையவைகளாக அவை உளளன.

CAS : சிஏஎஸ் : Communication Application Specification என்பதன் குறும்பெயர். 1980இல் அறிமுகப்படுத்தப்பட்ட இன்டல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் விதிமுறைகள்.

cascaded carry : தொடர்ந்து செல்லும் தொகு எண் : மொத்தத் தொகையில், கொண்டு செல்லும் எண்ணைச் சேர்க்கும் முறை.

cascade connection : தொடர் இணைப்பு : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒரே மாதிரியான துணைச் சாதனங்களை ஒன்றோடொன்று இணைத்தல். ஒன்றின் வெளியீடு அடுத்ததன் உள்ளிட்டுடன் இணைக்கப்படும்.

cascade control : தொடர் கட்டுப்பாடு : கட்டுப்பாட்டுச் சாதனங்கள் சங்கிலியைப் போன்று இணைக்கப்பட்டுள்ள தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்பு ஒவ்வொன்றும் அடுத்த