பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

CDC

123

cellular


ஆணைத் தொடர்கள் அமைப்பு, திறன் குறித்து பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. தகவல், கோப்பு அமைப்பு, ஆணைத் தொடர் மொழி, தொழில் நுட்பம், வன்பொருள் - மென்பொருள்களுக்கிடையே பரிமாற்றம், மக்களுடன் பரிமாற்றம் போன்ற துறைகளில் அறிவு வலியுறுத்தப்படுகிறது.

CDC : சிடிசி : Call directing code என்பதன் குறும் பெயர். ஒரு செய்தி அல்லது ஆணையைதானாகவே வழி நடத்திச் செல்லும் மூன்று அல்லது இரண்டு எழுத்துகளைக் கொண்ட ஒரு குறியீடு.

C DOT : சி-டாட் : Centre for Development of Telematics (Telecommunications) என்பதன் குறும்பெயர்.

C-Drive - சி - இயக்கி : கணினியின் உள்ளே நிலையாகப் பொருத்தப்பட்டுள்ள தகவல் சேமிப்பு வட்டு, எப்போதும் 'சி' என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

CE : சிஇ : வாடிக்கையாளர் பொறியாளர் எனப் பொருள்படும். Customer Engineer என்பதன் குறும்பெயர்.

cell : அறை, சிற்றம்; சிற்றறை : 1. ஒரு எழுத்து, ஒரு எட்டியல் அல்லது ஒரு சொல் போன்ற தகவலின் ஒரு அலகை மட்டும் சேமிக்குமிடம். 2. ஒரு மின்னணு விரிதாளின் அடிப்படை வடிவத்தை ஏற்படுத்தும் ஒரு தொகுப்பு அல்லது அச்சு வார்ப்புருவில் (matrix) உள்ள தனி ஒருங்கிணைப்பு இடம்.

cell address : அறை முகவெண் : விரிதாள் செயல்முறையில் அறையின் பத்தி அல்லது வரிசையை ஒருங்கிணைப்பவை.

cell animation : அறை உயிர்ப் படம் : ஒரு உயிர்ப்பட தொழில் நுட்பம். இதில் ஒரு ஓவியம் பின்னணியில் நிலையாக இருக்கும். உயிர்ப்பட உருவங்கள் ஒவியத்தின் மீது நகரும் போது அவை இயல்பாக நகர்வது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறது.'சிற்றறை உயிர்ப் படவியல் முறை ஆணைத் தொடர்கள் கிடைக்கின்றன.

cell array: சிற்றறை வரிசை : GKSஇல் அடிப்படை வெளியீடுகளில் ஒன்று. சிறிய பாலிகன் வரிசை முறையை அமைத்து ஒவ்வொன்றுக்கும் தனி நிறம் தருகிறது.

cell contents : சிற்றறை உட்பொருள்கள் : ஒரு விரிதாள் சிற்றறையில் உள்ள முகப்புச் சீட்டு, மதிப்பு, வாய்பாடு அல்லது பணிகள்.

cellular phone : செல்லிடப் பேசி; செல்பேசி; கைத்தொலைபேசி:

cellular radio : செல்லிட வானொலி : முழு நிலைப் பரப்பையும் அதிக சக்தியுள்ள நிலையான வானொலி நிலையங்களாக அமைப்பதற்குப் பதிலாகப் பிரித்து சேவை அளிப்பது. ஒருசில கிலோ மீட்டர்கள் மட்டுமே கேட்பதாக அவை இருக்கும். நடமாடும் தொலைபேசியின் தேவை அதிகரிப்பதால் சிற்றறை (செல்) அமைப்பின் மூலம் நிலையை ஈடு கட்டலாம். பல இயங்கும் சேவைகள், செல்லுக்குள் கொண்டு வரப்பட்டு செல்லின் அளவு குறைக்கப்படுகிறது. ஒவ்வொரு செல்லுக்கும் தனி பல்லிணைப்பு அலைவரிசை ஒலிபரப்பி - வாங்கி ஆகியவை அமைக்கப்படுகின்றன. ஒலிபரப்பிகட்கு குறைவான மின்சக்தியே தேவைப்படுகிறது. இதனால் வானொலி அலை வரிசைக் கற்றை (பாண்டு)களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி சில