பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

character Str

128

chassis


யீட்டை அளக்கும் அலகு. CPS என்று சுருக்கிக் கூறப்படுகின்றது.

character string: எழுத்துச் சரம்: அகர வரிசை மற்றும் எண்களைக் கொண்ட எழுத்துகளின் சரம்.

character terminal: எழுத்து முனையம்: வரைகலை திறனில்லாத காட்சித் திரை.

charactor type field: எழுத்து வகைப் புலம்.

character template: எழுத்துப் பலகை. மின்னணு ஒளிக்கற்றை காட்சித் திரையில் எண்ணெழுத்துகளாக மாற்றித் தரும் ஒரு சாதனம்.

charactron: கேரக்ட்ரான்: திரையில் அகர வரிசை எண் எழுத்துகளையும், சிறப்பு எழுத்துகளையும் காட்டும் சிறப்பு வகை கத்தோட் கதிர்க் குழாய்.

charge: ஏற்று: ஒரு பொருளில் உள்ள சமநிலைப்படுத்தப்படாத மின்சக்தியின் அளவு.

charge back systems: சார்ஜ் பேக் அமைப்புகள்: இறுதிப் பயனாளர் துறைகளுக்கு செலவுகளை ஒதுக்கீடு செய்யும் முறை. பயன்படுத்திய தகவல் அமைப்பு மூலாதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் செலவின் மதிப்பீடு செய்யப்படுகிறது.

charge card: மின்னூட்ட அட்டை:286 பி.சி. வகைகளை உற்பத்தி செய்யும் ஆல் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வன்பொருள் நினைவக மேலாளர். 286 சிப்புவை வெளியே எடுத்து மின்னூட்ட அட்டையில் பொருத்தி அதை துளையில் பொருத்தலாம்.

CCD: சிசிடி: Charge Coupled Device என்பதன் குறும்பெயர். சக்தி இணைந்த சாதனம். சேமிக்கப்பட்ட தகவல் குறிப்பிட்ட இடத்தில் நிற்காமல் சுழன்று கொண்டே இருக்கும் அரைக்கடத்தி நினைவகச் சாதனம்.

Charles Babbage Institute: சார்லஸ் பாபேஜ் இன்ஸ்டிடியூட்: வரலாற்றுக் கண்ணோட்டத்தில் தகவல் புரட்சியை ஆராய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனம். தகவலின் வரலாறு மற்றும் தொன்மைப் பொருள்கள் பற்றிய ஆராய்ச்சிகளுக்கான மைய நிறுவனமாகத் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.

chart: வரைப்படம்; விளக்கப்படம்: பட்டை வரைபடம் போன்ற அளவிடக்கூடிய தகவலை எளிதில் காணும் வண்ணம் குறிப்பிடல். செங்குத்தான அல்லது கிடைமட்டமான கோடுகளாகவோ அல்லது வட்டப்படம், போன்ற முறையில் தகவலை சிறு சிறு துண்டுகளாகப் பிரித்து படமாக அமைத்துக் காட்டுதல்.

chart of accounts: கணக்குகளின் வரைபடம்: பொது பேரேடு கணக்கீட்டு அமைப்பில் குறிப்பிட்ட தலைப்புகள் அல்லது கணக்குகளின் எண்ணிக்கை.

chart recorder: வரைபட பதிவு: பதிவேடு வைக்கும் சாதனம். பேனாவை வலது அல்லது இடது புறமாகத் திருப்பி அடியிலிருக்கும் காகிதத்தில் வரைபடங்கள் வரைவது.

chartchassis: வரைபட அடிக்கட்டகம்: உலோகச் சட்டம் இதன் மீது கம்பியிழுத்தல், துளைகள் மற்றும் பிற மின்னணு தொகுப்புகளைப் பொருத்த முடியும்.

chassis: அடிக்கட்டகம், அடிப்பகுதி: ஒரு மின்னணு சாதனத்திற்கான கம்பிகளை இணைக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ள உலோக உருவம்.