பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/131

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

chat

129

checkpoint


chat mode (Internet) : உரையாடும் முறை (இணையம்):தகவல் தொடர்பு முறை பயன்படுத்துபவர்கள் இதில் செய்திகளை ஒருவருக்கொருவர் தட்டச்சு செய்து பெறலாம். ஒவ்வொரு விசையை அழுத்தியவுடன் அது அனுப்பப் பட்டுவிடும்.

check bit : சோதனைத் துண்மி; சரி பார்ப்புத் துண்மி: சமநிலைத் துண்மி போன்ற இரும எண் சோதனை இலக்கம்.

check box : தேர்வு செய் / பெட்டி : தேர்ந்தெடுக்கக் கூடிய வாய்ப்புக்கு தற்போதைய நிலையைக் காட்டும் முறை. இதில் அடுத்துள்ள சிறிய பெட்டியில் எக்ஸ் அல்லது சோதனைக் குறியீடு சமிக்ஞையைக் காட்டினால் அதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை உணர்த்தும்.

check character : சோதனை எழுத்து : ஒரு தகவல்களின் தொகுதி இறுதியில் சேர்க்கப்படும் எழுத்து. சோதனை செய்யப்படும்போது இதைப் பயன்படுத்துகிறோம்.

check digits : சோதனை இலக்கங்கள் : எண் வடிவ தகவல் அலகைத் தகவலாக அனுப்பும்போது அதனுடன் சேர்க்கப்படும் ஒன்று அல்லது இரண்டு இலக்கங்கள். தகவல் எழுதும் போதோ அல்லது அனுப்பும் போதோ ஏதாவது தவறு ஏற்பட்டால் பிழை என்பதற்கான அடையாளம் தோன்றும்.

check indication : சோதனை குறிப்பிடுதல் : ஒரு பதிவகத்தில் 1 அல்லது 0 துணுக்கை அமைத்து அது பிழை ஏற்பட்டதா இல்லையா என்று குறிப்பிடச் செய்தல்.

check indicator : சோதனை காட்டி : ஒரு சாதனத்தில் ஒலி அல்லது ஒளி மூலம் அதன் இயக்கத்தில் பிழை அல்லது கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுதல்.

check plot : சோதனை வரைவி : இறுதி வெளியீட்டை அளிப்பதற்கு முன் ஒளிச் சோதனை மற்றும் திருத்துவதற்காக ஒளிக் காட்சிச் சாதனம் தானாக உருவாக்கும் ஒரு வரைவு.

check point : சோதனை இடம் : கையால் இயக்கும்போதோ அல்லது கட்டுப்பாட்டுச் செயல்முறையிலோ ஒரு ஆணைத் தொடரினைத் தடுத்து நிறுத்தும் குறிப்பிட்ட இடம். பிழை தீர்க்கும் ஆணைத் தொடர்களில் உதவுவதற்காக பெரும்பாலும் பயன்படுத்தப்படும்.

check pointing recovery : நிறுத்தி நிலையெடுத்தல்.

checkpoint / restart: சோதனையிடல் / மீண்டும் துவக்கல் : கணினி அமைப்பின் கோளாறிலிருந்து வெளியே