பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

circuit cap

133

clarion


அல்லாது, இதை மீண்டும் சரிசெய்ய முடியும்.

circuit capacity : மின்சுற்றுத் திறன் : ஒரே நேரத்தில் ஒரு மின்சுற்று கையாளக்கூடிய வழித்தடங்களின் எண்ணிக்கை.

circuit elements : மின்சுற்று வழிக் கூறுகள்;மின் இணைப்புக் கூறுகள்.

circuitry : மின்சுற்றுத் தொகுதி : அமைப்புகளுக்கு உள்ளேயும், இடையிலும் ஏற்படும் இணைப்புகளை விவரிக்கும் மின்சுற்றுகளின் தொகுதி.

circuit switching: மின்சுற்று இணைப்பமைத்தல் : ஒரு மின்சுற்றின் அகலப் பாதையை, இணைப்பு நிறுத்தப்படும் வரை செயல்படுத்தும், தகவல் தொடர்பு கட்டமைப்பின் இரண்டு முனைகளுக்கிடையிலான இணைப்பு.

circular list : வட்டப் பட்டியல்; சுழல் பட்டி: தொடுக்கப்பட்ட பட்டியல். பெரும் பாலும் ஒன்றன்பின் ஒன்றாய் தொடுப்பது. இதில் கடைசி உறுப்புக்கும் முதல் உறுப்புக்கும் இணைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும். Ring (வளையம்) என்றும் அழைக்கப்படுகிறது.

circular queue: வட்ட வரிசை:தகவல்களை ஒரு முனையில் நுழைத்து மற்றொன்றில் எடுக்கின்ற ஒரு வகை தகவல் தாங்கி. தாங்கியின் இருபுறமும் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும். காட்டிகள் இரண்டும் நடப்பின் ‘முன்’ பகுதியையும், ‘பின்’ பகுதியையும் கவனித்துக் கொண்டே இருக்கும்.

circular reference (CIR): வட்டக் குறிப்பு : தகவல்தாளில் தன்னுடைய முகவரியையே வாய்பாட்டின் பகுதியாகப் பயன்படுத்தும் திறனுடைய, சிற்றறையில் பொருத்தப்பட்டுள்ள வாய்பாடு. சான்றாக சிற்றறை IV25 - இன் வாய்பாடு @sum (IV12:IV25) என்று படிக்கப்படும். இது தன்னைத் தானே தொடர்ந்து கூட்டிக் கொண்டு மிகப்பெரிய எண்ணை உருவாக்கும்.

circularshift: வட்டமான மாற்று: ஒரு முனையிலிருந்து வெளியேற்றப்படும் துண்மிகள் அல்லது எழுத்துகள் பதிவேட்டின் எதிர்முனையில் சென்று சேரும்படியான இட மாற்றும் செயல்முறை. End around shift என்றும் சொல்லப்படுகிறது.

circulations: சுழற்சிகள்.

CISC architecture: சிஸ்க் கட்டுமானம்: Complex Instruction Set Computing Architecture என்பதன் குறும்பெயர்.

CIU : சிஐயு : Computer Interface Unit : என்பதன் குறும்பெயர்.

cladding : மூடுதல் ; ஒளி இழைகளில், ஒளி இழை சாதனத்தின் இரண்டாவது அடுக்கு ஒளி அலையை அந்த சாதனத்தின் மையப் பகுதிக்கு அனுப்பும் முறை.

clamping ring : பிடிக்கும் வளையம் : வளையத்திற்குள் நெகிழ் வட்டைத் தள்ளி விடும் 5.25" நெகிழ் வட்டு இயக்கி மையக் கூம்பின் ஒரு பகுதியாகவே இது இருக்கும்.

clarion: கிளாரியன்: கிளாரியன் மென் பொருள் கார்ப்பரேஷனின் பி.சி. பயன்பாட்டு வளர்ச்சி ஆணைத் தொடர். Professional Development என்பதே முக்கிய தயாரிப்பு. இதில் பாஸ்கல் போன்ற ஆணைத்தொடர் மொழியும், டிபிஎம்எஸ் மற்றும் புரோட்டோ டைப்பிங் ஜெனரேட்டரும் அட்க்கம். Personal Developer என்பது ஆணைத்தொடராளர் அல்லாதவர்களுக்கு.