பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விரிவுபடுத்தும், விரைவுபடுத்தும் ஆற்றல் அவற்றிற்கில்லை. சிந்தனையின் அடிப்படையில் மனிதன் மேற்கொள்ளும் பணிகளுக்கு மாபெரும் துணையாக நிற்கும் திறன், எண்ணற்ற பணிகளை அவன் வகுத்த பாதையில் தானே மேற்கொள்ளும் திறன் கொண்டது கணினி. கருவிகளில் இதன் தன்மையும் வேறு; தரமும் வேறு. இன்று கணினியைப் பயன்படுத்தாத வாழ்க்கைத் துறைகள் எவையுமே இல்லை என்னும் அளவிற்கு அது அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி, விசுவரூபம் எடுத்து நிற்கிறது.

அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சியின் எந்த ஒரு கூறுபாட்டின் பயனும் மக்களைச் சேர வேண்டுமானால் அது பற்றிய கல்வி அறிவு மக்களை எட்ட வேண்டும். மக்கள் மொழியில் இல்லாத ஒன்று சமுதாயத்தில் பரவலாக இடம் பெற இயலாது. இன்று மேலை நாடுகளில் கணினிக் கல்வி ஆரம்பப் பள்ளி வகுப்பு வரை எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. தமிழக அரசு இப்பணியில் முன்னோடியாக விளங்குகிறது. இந்தப் பயணம் வெற்றி பெறுவதற்குச் சிறியதும், பெரியதுமாகப் பல நூல்கள் கணினி பற்றி வெளிவர வேண்டும்.

அறிவியல் துறைகளில் நூல்கள் எனப்படும் கட்டடத் திற்கு, அது சிறியதாயினும் பெரியதாயினும், செங்கல்லாக, கதவாக, பலகணியாகப் பயன்படுவன (Building Blocks) கலைச் சொற்கள். இந்த அடிப்படை உறுப்புகளை வைத்துதான் எந்த மாளிகையும் உருவாக வேண்டும். அந்த உறுப்புகளை உருவாக் கிக் கொடுக்கும் பணியைத்தான் நண்பர் மணவை முஸ்தபா 'கணினிக் கலைச் சொல் களஞ்சிய அகராதி' என்ற இந்த நூல் மூலம் நிறைவேற்றியிருக்கிறார்.

கணிப்பொறித் துறையில் ஆங்காங்கு சிறு, சிறு கலைச் சொல் தொகுப்புகள் வந்திருக்கின்றன. இந்த நூல் அவற்றி னின்றும் கணிசமாக வேறுபட்டது. இந்த அளவிற்கு முழுமை யான தொகுப்பு நானறிந்தவரை இதுவரை வரவில்லை. இரண்டாவதாக இது கணிப்பொறிச் சொற்களின் பொருள், அச்சொல் குறிக்கும் பொருள் பற்றிய விளக்கம் இரண்டின் இணைப்பு. இதன் ஒரு கூறுபாடு கணினி அகராதி: இன்னொரு

18