பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data pre

200

data pro



நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்படும் எண் மதிப்பீடு. ஒரு எளிமையான நோட்டு வரைபடத்தில் நேரத்தை எக்ஸ் அச்சில் குறிப்பிடலாம். துரத்தை ஒய் அச்சில் குறிப்பிடலாம். இரண்டும் வெட்டிக் கொள்ளும் இடம் தகவல் மையம் ஆகும்.

data preparation: தகவல் தயாரிப்பு: தகவல்களை வடிவமைப்பில் திரட்டி, கணினி ஒன்றில் உள்ளிடுவதற்கு உரிய வடிவத்தில் சேமித்தல்.

data preparation device : தகவல் தயாரிப்புக் கருவி : கணினி ஒன்றினால் வாசிக்கக்கூடியதாக ஊடகம் ஒன்றில் அல்லது வடிவத்தில் தகவல்களைச் சேகரித்து மாற்றும் கருவி.

datapro: டேட்டாபுரோ: கணினி ஒன்றின் வன்பொருள் மற்றும் மென்பொருள் சாதனங்கள் தொடர்பான ஆழ்ந்த விவரங்களை வழங்குகிற ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம்.

data processing : தகவல் அலசல் ; தகவல் ஆய்வு; தகவல் தயாரிப்பு: 1. ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவு செய்ய தகவலில் செய்யப்படும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பணிகள். 2. கணினி மையம் ஒன்றின் அனைத்துப் பணிகள். 3. தகவல் தயாரிப்பு கருவியின் பணிகள். 4. பயனாளருக்குப் பயனுள்ள தகவல்களை வழங்க தகவல்களில் செய்யப்படும் பணிகள்.

data processing centre : தகவல் தயாரிப்பு மையம் : தகவல்களைப் பெறவும் மனிதர்களின் ஆணைகளுக்கு ஏற்ப அவற்றை வகைப்படுத்தவும் பின்னர் அதன் முடிவுகளையும் வழங்கத் தேவையான கருவிகளைக் கொண்ட கணினி மையம். தகவல் தயாரிப்பு மையம் போன்றது. இதனை நடவடிக்கை மையம் என்றும் கூறுவதுண்டு.

data processing curriculum : தகவல் தயாரிப்புக் கல்வி : பள்ளி அல்லது கல்லூரி ஒன்று வழக்கமாக வழங்கும் கல்வி வகுப்பு. இக்கல்வி பயன்படு ஆணைத்தொகுப்புகளைக் கையாளவும், முறைமை ஆய்வாளராகப் பணிபுரியவும், உள்ளீடு நிலையிலான பணிகளைச் செய்யவும் மாணவர்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனம்.

data processing cycle : தகவல் தயாரிப்புச்சுழல்; தகவல்செயலாக்கச் சுழல்: உள்ளீடு, தயாரிப்பு மற்றும் வெளியீடு ஆகியவை அடங்கிய ஒருங்கிணைந்த பணிகள்.

data processing management : தகவல் தயாரிப்பு நிர்வாகம் : தகவல் தயாரிப்புப் பணி, அதில் ஈடுபடுவோர், அதற்கான கருவிகளை நிர்வகித்தல், இந்நிர்வாகத்தில் திட்டமிடல், கட்டுப்பாடு, செயல்பாடு ஆகியன. ஏற்கப்பட்ட கோட்பாடுகள் பின்பற்றப்படுவதில் மற்ற நிர்வாகங்களுக்குத் தேவைப்படும் திறனே இதற்கும் தேவைப்படுகிறது.

data manager : தகவல் தயாரிப்பு மேலாளர்.

data processing system : தகவல் தயாரிப்பு முறைமை; தகவல் செயலாக்க அமைப்பு; தகவல் தயாரிப்பு இணைப்பு, வன்பொருள் 'மென்" பொருள், உழைப்பவர், தகவல்களை ஏற்றல், திட்டப்படி அதனைத் தயாரித்தல், மற்றும் விரும்பும் முடிவுகளைத் தயாரிப்பதற்கான நடைமுறைகள் ஆகியவற்றின் தொகுப்பு.

data processing technology : தகவல் தயாரிப்பு தொழில் நுணுக்கம்; தகவல் செயலாக்கத் தொழில் நுட்பம்: