பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data pro

201

data sec



தகவல்களைக் கையாளுவதற்கான அறிவியல்.

data processor: தகவல் தயாரிப்புக் கருவி : தகவல்களின் மீதான செயல் பாட்டை ஆற்றக் கூடிய கருவி. எடுத்துக்காட்டாக மேசைக்கணக்கிடு கருவி அல்லது எண்ணியல் கணினி.

data propagator: தகவல் பரப்பி: DB2 மற்றும் IMS/ESA DB தகவல் தளங்களிடையே ஒரு நிலைப்பாட்டினை ஏற்படுத்துகிற IBM மொழி. IMS தளத்தில் தகவல் மாற்றப்படுகிறபோது, அது தானாகவே DB2 தகவல்தளத்திற்கு மாற்றப்படுகிறது.

data protection : தகவல் பாதுகாப்பு : தகவல்களின் அழிவு, மாற்றம் அல்லது வெளிப்படலுக்கு வகை செய்யக்கூடிய, விரும்பியோ, விரும்பாமலோ இடம் பெறும் செயல்களிலிருந்து தகவல்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்.

data protection act : தகவல் காப்புச் சட்டம் : இது நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் ஒரு சட்டம். மக்கள் பற்றிய கணினி சார்ந்த சொந்தத் தகவல்களை வைத்திருக்கும் அமைவனங்கள், வணிக நிறுவனங்கள், நிலையங்கள் அனைத்தும் அந்த உண்மையைப் பதிவு செய்து கொள்ளவேண்டும். தங்களைப் பற்றிய கோப்புகளைப் பார்வையிடுவதற்குத் தனிமனிதர்களுக்கு உரிமையுண்டு. காவல் மற்றும் மருத்துவத்துறை பதிவேடுகளுக்கு இதிலிருந்து விலக்கு உண்டு. தவறான தகவல்களைக் கொண்ட ஒரு பதிவேட்டினை மாற்றும்படி ஆணையிடப்படலாம்.

data purification : தகவல் தூய்மையாக்கம் : தகவல்களின் செல்லும் தன்மையை உறுதிப்படுத்தும் செய்முறை.

data rate : தகவல் வேகவீதம்: தகவல்கள் அனுப்பப்படும் வேக வீதம். செய்தி வேகம் மூலம் அளவிடுவர். ஒரு விநாடிக்கு இத்தனை துண்மிகள் என்று கணக்கிடப்படும்.

data record : தகவல் ஆவணம்: ஒரு குறிப்பிட்ட பொருள் தொடர்பான பல்வேறு கூறுகளைப் பற்றியதகவல் தொகுப்பு, தகவல் கோப்பு ஒன்றின் பகுதி.

data reduction : தகவல் இறுக்கம் ; தகவல் குறைப்பு : வகை செய்யப்படாத தகவல்களை பயனுள்ளதாகவும் இறுக்கமானதாகவும் எளிமையானதாகவும் மாற்றும் நடைமுறை. இம்முறையில் ஈடுகட்டல், அளவிடல், நெருடல், நீக்குதல், இறுக்குதல், சீர்செய்தல், வகைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படுகின்றன.

date resource management: தகவல் ஆதார மேலாண்மை: ஒர் அமைவனத்தின் தகவல் ஆதாரங்களை மேலாண்மை செய்யும் பணிகள் தொடர்பாகப் பயன்படுத்தப்படும் தகவல் பொறியமைவுகள், தொழில் நுட்பம், நிருவாகச் சாதனங்கள் ஆகியவற்றை மேலாண்மை செய்யும் நடவடிக்கை: தகவல் தள நிருவாகம், தகவல் நிருவாகம், தகவல் திட்டமிடல் ஆகியவை இதன் மூன்று முக்கிய அமைப்புகள்.

data scope : தகவல் காட்டி : தகவல் காட்சித் திரையைக் கண்காணிக்க உதவும் சிறப்பு காட்சியகக் கருவி. அனுப்பப்படும் தகவல்களின் உள்ளடக்கத்தை அது காட்டுகிறது.

data security: தகவல் பாதுகாப்பு: தற்செயலாகவோ, வேண்டுமென்றோ