பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data typ

204

DB-25



லப் பயன்படுகின்றன. இவை குறும அலைநீளம், அகல அலை நீளம், குரல் அலை நீளம் என மூன்று வகைப்படும்.

data type : தகவல் வகை; தகவல் மாதிரி.

data validation : தகவல் கள வரையறை : தகவல் களங்கள் விரும்பப்படும் பண்புகளுக்கேற்ப அமைவதை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள். பொருத்தமற்ற எழுத்துகள் அல்லது குறிப்பிடப்பட்ட நீளம், அல்லது மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தகவல், களங்கள் சோதனையிடப்படலாம்.

data value : தகவல் மதிப்பளவுகள் ; தகவல் மதிப்பீடு : தகவல் வகைகளின் பிரதிநிதியாகப் பயன்படும் குறியீடுகளின் தொடர்.

data verification : தகவல் சரிபார்த்தல் : தகவல் ஆதாரங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல்கள் சரியான வகையைச் சார்ந்ததா, சரியான நீளமுடையதா என்பனவற்றைச் சரிபார்த்தல் இன்றியமையாதது. எடுத்துக்காட்டாக, ஒரு சம்பளப்பட்டியல் தகவல் ஆதாரத்தில் ஒரு பணியாளரின் முகவரி அஞ்சல் குறியீடு முக்கியமாகப் பதிவாகியிருக்க வேண்டும். அஞ்சல் குறியீடு இலக்கங்களில் அமைந்திருக்கிறதா, ஆறு இலக்கங்களைக் கொண்டிருக்கிறதா (இந்திய அஞ்சல் குறியீடுகள் ஆறு இலக்கங்கள் கொண்டவை) என்பதைத் தகவல் ஆதாரம் சரிபார்த்தல் வேண்டும்.

data word : தகவல் சொல் : ஒழுங்க மைக்கப்பட்ட, குறிப்பிட்ட எழுத்துகளின் தொகுப்பு. பொதுவாக முன்பே வரையறுக்கப்பட்ட எண், கணினியின் இணைப்புகளில் சேமிக்கப்பட்டு, தகவலின் அடிப்படை அலகாக வேறிடத்துக்கு மாற்றப்படுகிறது.

data word size: தகவல் சொல் நீளம் .

date field: தேதிப்புலம்; தேதிவகைப் புலம்.

date math : தேதிக் கணக்கு : தேதிகளைக் கொண்டு செய்யப்படும் கணிப்புகள். எடுத்துக்காட்டு ஜனவரி 30+5 = பிப்ரவரி 4.

datum : தகவல் உருப்படி : கணினிச் சொல் போன்ற தகவலின் ஒரு அலகு.

daughter board: மகள் பலகை: தாய் பலகையுடன் பொருத்தப்படும் இணைப்புப் பலகை.

DB : டிபி : 'டெபிசில்' (Decibal) என்பதன் குறும்பெயர். ஒரு செய்தித் தொடர்புக் கம்பியில் அனுப்பீட்டு இழப்பீடுகளை மடக்கை முறையில் அளவிடுவதற்கான அலகு.

DB/DC (Data Base / Data Communications) : டிபி/டிசி (தகவல் தளம்/தகவல் தொடர்புகள் : தகவல் தளப் பணிகளையும், தகவல் தொடர்புப் பணிகளையும் ஆற்றுகிற மென் பொருள்களைக் குறிக்கும் சொல்.

DB2 : டிபி2 (தகவல் தளம்-2) : ஒரு பெரிய முதன்மைப் பொறியமை வில் இயங்குகிற ஐபிஎம்(IBM) முதன்மைப் பொறியமைவிலிருந்து உருவான தகவல் தள மேலாண்மைப் பொறியமைவு (DBMS). இது, ஐபிஎம் -இன் பெருந்தகவல் தள விளை பொருளாகியுள்ள முழுமையான டிபிஎம்எஸ் பொறியமைவு. இது கட்டமைவு வினவு மொழி (SQL) இடைமுகப்பு. -

DB-25-connector: டிபி-25 இணைப்பி: 25 செருகிகளை அல்லது 25 செருகு