பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

deblock

206

decentralized



யைச் செலுத்தப் பயன்படுத்தும் வங்கி ஒன்றின் அட்டை. (கடைக் காரரும் அந்தக் குறிப்பிட்ட வங்கியில் கணக்கு வைத்திருப்பார்).

deblock : ஆவணப்பிரிப்பு : ஒரு தொகுதியிலிருந்து ஆவணங்களைப் பிரித்தெடுத்தல்.

deblocking : தொகுப்பிலிருந்து பகுத்தல் : ஒரு தொகுப்பு அல்லது தருக்கவியல் ஆவணங்களின் குழு ஒன்றிலிருந்துதருக்கவியல் ஆவணம் ஒன்றைப் பிரித்தெடுத்தல்.

debounce: மறுபதிவு தவிர்ப்பு: கண்டு பிடிக்கப்படுவதைத் தவிர்க்க ஒரு விசை அல்லது இணைப்புக்குமிழ் அழிவு தரும் வகையில் மூடப்படு வதைத் தவிர்த்தல். ஒரு மின்குமிழின் இணைப்புகள் தடைப்பட கால அவகாசம் அளிப்பது ஒரு வகை வழியாகும்.

debug : தவறு நீக்குதல்; தவறு நீக்கி; பிழை நீக்கி : ஆணைத் தொகுப்பு ஒன்றில் பிழைகள் அனைத்தையும் கண்டுபிடித்தல், இருக்குமிடத்தை உறுதி செய்தல், மற்றும் அவற்றை நீக்குதல். கணினியின் பிழையான இயக்கத்தைச் சீர் செய்தல்.

debugger : தவறு கண்டறி சாதனம்; பிழை நீக்கி : ஒரு செயல்முறையிலுள்ள தவற்றைக் கண்டறிய உதவுகிற மென்சாதனம். இது, ஒரு குறிப்பிட்ட அறிக்கையில் செயல் முறையை நிறுத்தவும், ஒரே சமயத்தில் அதன் வழியே ஒர் அறிக்கையைச் செலுத்தவும் பொறியமைவுத் தகவல்களையும், செயல்முறை மாறி மதிப்புருக்களையும் பார்க்க அனுமதிக்கிறது. நவீன தவறு கண்டறி சாதனங்கள் ஆதார மற்றும் இலக்குக் குறியீடுகளை இணைக்கிறது. இதனால், செயல்முறைப்படுத்துபவர், அறிவுறுத்தங்கள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும்போதே ஆதாரச் செயல்முறையை வகுக்க முடிகிறது.

debugging : பிழை நீக்கம் ; தவறு போக்கல்: தவறு கண்டறிதல்.

debugging aids : பிழை நீக்க உதவிகள் : கணினியின் வழக்கமான சோதனை நடவடிக்கைகள்.

DEC: டிஇசி: Digital Equipment Corporation என்பதன் குறும்பெயர். எண்ணியல் துணைக்கருவி அமைவனமாகும்.

decatenate : தொடர்பிரித்தல்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளாகப் பிரித்தல். சேர்த்தலுக்கு எதிர்நிலையானது.

decay : சிதைவு : குறியீடு அல்லது மின்னேற்றத்தின் வலிமை குறைதல்.

decay time: சரிசெய்யும் நேரம்.

deceleration time: ஒடுக்க நேரம்.

decending sort: இறங்குமுக வரிசைப்படுத்தல் : தகவல்களை மேலிருந்து கீழாக இறங்குமுக வரிசையில் வகைப்படுத்தல்.

decentralized computer system : மையமிலா கணினி பொறியமைவு: கணினியும், சேமிப்புச்சாதனங்களும் ஒரே அமைவிடத்தில் அமைந்து, கணினியை அணுகும் சாதனங்கள் வேறிடங்களில் அமைந்திருக்கிற பொறியமைவு.

decentralized processing : மையமற்று செயல்முறைப்படுத்துதல் : வெவ்வேறு அமைவிடங்களில் அமைந்துள்ள கணினியமைவுகள், கணினியமைவுகளிடையே தகவல்களை அனுப்பலாமென்றாலும், இது அன்றாடச்செய்தித் தொடர்புகளைக் கட்டுப்படுத்துகிறது. இது பகிர்